Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வேகமெடுக்கும் பிஎஸ்எல் தொடர்.. அட்டவணையே உறுதியாகவில்லை.. அதற்குள் அணிகள் செய்யும் அட்டகாசம்!

அபுதாபி: பிஎஸ்எல் போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்குவது என்பதே இன்னும் தெரியாத நிலையில் வீரர்கள் தங்கள் பணிகளை தொடங்கிவிட்டனர்.

கொரோனா அச்சுறுத்தலால் ஒத்திவைக்கப்படிருந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் மீண்டும் ஜூன் 5ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க திட்டமிடப்பட்டது.

இதற்கான பணிகளுக்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அபுதாபி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

டி20 தொடர்

டி20 தொடர்

பாகிஸ்தான் ப்ரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கியது. மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்று வந்த இந்த தொடரில் திடீரென வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பிஎஸ்எல் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 34 போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 20 போட்டிகள் உள்ளன.

மீண்டும் பி.எஸ்.எல்

மீண்டும் பி.எஸ்.எல்

இதனையடுத்து ஐபிஎல்-ஐ போன்று பிஎஸ்எல் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜூன் 5ம் தேதி முதல் பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக வீரர்கள் பலரும் அபுதாபி சென்று குவாரண்டைனில் இருந்து வருகின்றனர்.

விளக்கம்

விளக்கம்

16 தொலைக்காட்சி ஒளிப்பரபரப்பு குழுக்கள், துபாயில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா குழுக்களுக்கு மட்டும் அமீரக அரசு அனுமதி வழங்காமல் உள்ளது. அபுதாபி அரசு அனுமதி வழங்கியவுடன் ஜூன் 7ம் தேதி முதல் பிஎஸ்எல் தொடங்கலாம் எனக் கூறப்படுகிறது.

பயிற்சி ஆட்டம்

பயிற்சி ஆட்டம்

இந்நிலையில் குவாரண்டைனை முடித்துள்ள இஸ்லாமாபாத் யுனைட்டெட் மற்றும் லாகூர் குவாலண்டர்ஸ் அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சி ஆட்டங்களை தொடங்கியுள்ளனர். இதில் குறிப்பாக கட்டா கிளாடியேட்டர்ஸ் அணியில் புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ஆண்ட்ரே ரஸல், விரைவில் தனது பயிற்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்ட்ரே ரஸல்

ஆண்ட்ரே ரஸல்

இதுகுறித்து பேசிய ரஸல், நான் ஐபிஎல்-ல் கொல்கத்தா அணிக்காகவும், பிக் பேஷ் தொடரில் மற்றும் கரீபியம் ப்ரீமியர் லீக்கிலும் விளையாடியுள்ளேன். ஆனால் பிஎஸ்எல் தொடர் சிறந்த ஒன்று எனக் கூறுவேன். இந்த தொடரில் உள்ள பந்துவீச்சின் தரம் மற்ற தொடர்களை விட சவாலானதாக இருக்கும். இதில் விளையாட ஆர்வமாக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, June 3, 2021, 21:49 [IST]
Other articles published on Jun 3, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+