Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

துணிந்து இறங்கிய பாகிஸ்தான்.. கண்முன் உள்ள "ஒரே" நம்பிக்கை - ஐபிஎல் "சரவெடி" அப்டேட்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தனது பிஎஸ்எல் டி20 தொடரை, ஜூன் 5ம் தேதி முதல் அமீரகத்தில் நடத்தவிருப்பதன் மூலம், இந்திய ரசிகர்களுக்கு புது நம்பிக்கை கிடைத்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு இருந்த சூழலுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தினசரி பாதிப்பு சற்று குறைந்துள்ளது எனலாம். அப்படியிருந்தும் கூட, தினசரி பாதிப்பு இன்னும் லட்சங்களில் தான் இருக்கிறது.

தினம் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். இந்த சூழலில், பயந்து கொண்டே ஐபிஎல்-லை நடத்திக் கொண்டிருந்த பிசிசிஐ-க்கு அதிர்ச்சி தரும் விதமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்கரவர்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. பிறகு அடுத்தடுத்து பல வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் என கொரோனா தன் வேலையைக் காட்ட அரண்டு போன பிசிசிஐ, மறு தேதி குறிப்பிடாமல் தொடரை ஒத்திவைத்தது.

 பிசிசிஐ குழப்பம்

பிசிசிஐ குழப்பம்

இந்த நிலையில், மீதமுள்ள 31 ஆட்டங்களை எங்கு நடத்துவது என்பதை தீர்மானிப்பதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது. இந்தியாவில் மீண்டும் இங்கு ஐபிஎல் தொடங்க வாய்ப்பே இல்லை. பிசிசிஐ தலைவர் கங்குலியும் அதை உறுதிப்படுத்திவிட்டார். அதேசமயம், இலங்கை, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று இடங்களில் ஐபிஎல் நடத்தப்படலாம் என்று கூறப்பட்டது. குறிப்பாக, இலங்கையில் மீதமுள்ள போட்டிகளை நடத்த அதிகம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் கால நேரமும், இலங்கையின் கால நேரமும் GMT+5:30 hours படி ஒன்று. இதன் மூலம், இந்தியாவில் போட்டிகளை நடத்திய அதே நேரத்திற்கே இலங்கையிலும் நடத்தலாம். இந்தியாவில் டிவியில் அதை பார்ப்பவர்களும், தங்களது வழக்கமான கால நேரத்தில் பார்க்கலாம். மேலும், இலங்கையில் தொடரை நடத்துவதன் மூலம் பி.சி.சி.ஐ மற்றும் ஐ.பி.எல் 2021 ஸ்பான்சர்கள் இந்திய தொலைக்காட்சியில் 'பிரைம் டைம் ஸ்லாட்டை' அதிகம் பயன்படுத்த முடியும் என்ற பல கணக்கீட்டுகளின் அடிப்படையில் இலங்கையை பெஸ்ட் சாய்ஸாக பிசிசிஐ கருதியதாக கூறப்பட்டது. ஆனால், இலங்கையில் தினம் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பால், அங்கு நடத்த இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

 ஜூன் 5 முதல்

ஜூன் 5 முதல்

ஸோ, இந்தியாவின் ஒரே ஆப்ஷனாக இருப்பது ஐக்கிய அரபு அமீரகம் மட்டும் தான். இந்த நம்பிக்கைக்கு வலு சேர்ப்பது போல, பாகிஸ்தான் தனது PSL டி20 லீக் தொடரை ஜூன்.5 முதல் அமீரகத்தில் தொடங்க முடிவு செய்திருக்கிறது. இதற்கான, மே.25 முதல் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். வீரர்கள், அதிகாரிகள், ஒளிபரப்பு பொறுப்பாளர்கள் என்று அனைவரும் பயோ-பபுளில் கொண்டு வரப்படுகின்றனர்.

 அனைத்துக்கும் ஒப்புதல்

அனைத்துக்கும் ஒப்புதல்

முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் 4ம் தேதியோடு பிஎஸ்எல் தொடர் நிறுத்தப்பட்டிருந்தது. வெறும் 14 போட்டிகளே நடத்தப்பட்டிருந்தன. இந்நிலையில், மீதமுள்ள 20 போட்டிகளையும் அமீரகத்தில் நடத்துகிறது பாகிஸ்தான். இந்த தகவலை கராச்சி கிங்ஸ் அணியின் உரிமையாளர் சல்மான் இக்பால் உறுதி செய்துள்ளார். இத்தொடர் குறித்த பாகிஸ்தானுக்கும் - அமீரகத்துக்கும் இடையேயான அனைத்து நிபந்தனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

 ஐபிஎல் மீண்டும்?

ஐபிஎல் மீண்டும்?

இந்த தகவல் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு திருப்தியை கொடுத்ததோ என்னவோ, நிச்சயம் இந்திய ரசிகர்கள் அனைவரும் 'ஹேப்பி அண்ணாச்சி' மோடில் இருப்பார்கள். இங்கு நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரை அமீரகத்தில் நடத்த ஆலோசிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானும் அங்கு தொடரை நடத்த அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், ஐபிஎல்-லையும் அமீரகத்தில் நடத்தும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

Story first published: Saturday, May 22, 2021, 13:16 [IST]
Other articles published on May 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+