Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனியைப் பற்றி பேச வந்த போது.. புஜாரா மகளின் அந்த 'க்யூட்' வார்த்தை.. சாதிச்சிட்டீங்க தோனி

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தன்னை ஏலம் எடுத்ததற்காக நன்றி தெரிவித்து புஜாரா வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.

2021 ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று (பிப்.18) சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய டெஸ்ட் அணியின் புஜாராவை அவரது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கே சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது.

கடைசியாக, கடந்த 2014-ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடிய புஜாரா, 7 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தனது ஐபிஎல் கனவை நனவாக்கியுள்ளார். சிஎஸ்கே நிர்வாகம் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

Pujaras daughter praised dhoni for being selected his dad in csk team ipl 2021

இந்த நிலையில் ஐபிஎல் தேர்வு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள புஜாரா, அதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில், "ஐபிஎல் போட்டிக்குத் திரும்பியது சிறப்பானதாக உள்ளது. சிஎஸ்கே ஜெர்சியில் விளையாட எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். நான் மீண்டும் தோனி தலைமையில் விளையாட இருக்கிறேன். நான் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும்போது தோனிதான் கேப்டன். இப்போது மீண்டும் அவருடன் இணைந்து விளையாடுவதில் ஆர்வமாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

புஜாரா தோனி குறித்து பேச முற்பட்ட போது, அவரது மகள் அதிதி புஜாரா. 'உங்க தல சூப்பரு' என கியூட்டாக கூறினார். இது தோனி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

அதுசரி.. புஜாரா பொண்ணுக்கு எப்படி தமிழ் தெரியும்???

Story first published: Friday, February 19, 2021, 18:03 [IST]
Other articles published on Feb 19, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+