Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்.. புனேவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி

மும்பை: புனேவுக்கு எதிரான முக்கியமான லீக் ஆட்டத்தில் டெல்லி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது.

ஐ.பி.எல். தொடரின் 52-வது லீக் ஆட்டம் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்றது. ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததது டெல்லி டேர்டெவில்ஸ்.

Pune lose openers Rahane-Tripathi cheaply against Delhi

டெல்லி அணி ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்த நிலையில் இப்போட்டியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 45 பந்தில் 9 பவுண்டரியுடன் 64 ரன்களும், ரிஷப் பந்த் 22 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் 36 ரன்களும் குவித்தனர்.

169 என்ற வெற்றி இலக்கை விரட்டிய புனே, 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புனேவின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது. சுமித் 38 ரன்களை சேர்த்தார், இவருடன் ஜோடி சேர்ந்த மனோஜ் திவாரி 64 ரன்களை குவித்தார்.

டெல்லி அணி சார்பில் ஜாகீர்கான், மொகமது ஷமி தலா இரண்டு விக்கெட்களையும், நதீம் மற்றும் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Story first published: Saturday, May 13, 2017, 5:58 [IST]
Other articles published on May 13, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+