ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கம்!
சென்னை: ஐபிஎல் போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அடுத்த ஐபிஎல் தொடருக்காக புனேவாரியர்ஸ் அணி செலுத்த வேண்டிய உத்தரவாத தொகை ரூ170.2 கோடியை சஹாரா குழுமம் செலுத்தாதது குறித்து விவாதிக்கப்பட்டது.
இறுதியில் ஐபிஎல் போட்டிகளில் இருந்து புனே வாரியர்ஸ் அணியை நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
Story first published: Saturday, October 26, 2013, 14:45 [IST]
Other articles published on Oct 26, 2013


Click it and Unblock the Notifications