
முக்கிய சுற்று
பிளேஆப் குவாலிபையர் ரவுண்ட் என்பது அரையிறுதியை போன்றது. இதில் வெற்றி பெற்றால் நேரடியாக பைனலுக்கு போக முடியும். தோற்றால், பெங்களூரில் 19ம் தேதி நடைபெறும் குவாலிபையர்-2 ரவுண்டில், எலிமினேட்டர் ரவுண்டில் வென்ற அணியோடு மோத வேண்டும். அதில் வெல்லும் அணி, பைனலுக்கு வரும்.

நாளை குவாலிபையர்
நாளை மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை-புனே அணிகள் குவாலிபையர் ரவுண்டில் மோத உள்ளன. 17ம்தேதி பெங்களூரில் எலிமினேட்டர் சுற்றில் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன.

அதிக போட்டியில்லையே
ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டி நடைபெறுகிறது. எனவே அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ், 2 அல்லது 3 போட்டிகள்தான் ஆட வேண்டியிருந்திருக்கும். ஆனால், அயர்லாந்து தொடரில் ஆடுவதற்கு பென் ஸ்டோக்ஸ் அழைக்கப்பட்டுள்ளார்.

காஸ்ட்லி வீரர்
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இங்கிலாந்து வீரர்களை அயர்லாந்து டெஸ்டில் ஆட அழைத்துள்ளதால் பென் ஸ்டோக்ஸ் அங்கு சென்றுவிட்டார். எனவே, முக்கியமான இனிவரும் போட்டிகளில் புனேக்காக ஸ்டோக்ஸ் ஆட முடியாது. இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் ரூ.14.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட காஸ்ட்லி வீரர் பென் ஸ்டோக்ஸ்.

சிறந்த ஆல்ரவுண்டர்
இந்த தொடரில் முக்கியமான கட்டத்தில் சதம் விளாசி தனது அணியை வெற்றிபெறச் செய்தார். பந்து வீச்சும் குறை சொல்லாத முடியாத அளவுக்கு இருந்தது. இப்படி ஒரு ஆல்ரவுண்டரை புனே அணி இழப்பது அதன் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











