Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐபிஎல்.. டெல்லியை பந்தாடிய பஞ்சாப் 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

மெகாலி: டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், அதிரடி விளையாடிய பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

ஐபிஎல் லீக் 36வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

 Punjab demolish Delhi by 10 wickets; Guptill-Sandeep shine for KXIP

அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 67 ரன்னில் சுருண்டது. பஞ்சாப் அணியின் சந்தீப் சர்மா 4 ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களம் இறங்கியது.

மார்ட்டின் கப்தில், ஹசிம் அம்லா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அம்லா நிதானமாக விளையாட மார்ட்டின் கப்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பஞ்சாப் அணி 7.5 ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மார்ட்டின் கப்தில் 27 பந்தில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்தும், அம்லா 20 பந்தில் 16 ரன்கள் எடுத்தும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். 3 விக்கெட்டுக்கள் வீழ்த்திய சந்தீப் ஷர்மா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 9 போட்டிகளில் 4 வெற்றிகள் மூலம் 5-வது இடத்தில் உள்ளது. டெல்லி 8 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

Story first published: Sunday, April 30, 2017, 20:17 [IST]
Other articles published on Apr 30, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+