மிரள வைத்த கெயில்.. ஹைதராபாத்தை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி
Recommended Video

பெங்களூர்: ஐபிஎல் தொடரில் பஞ்சாப், ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி நடந்தது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த நிலையில் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் கொல்கத்தா 3 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 2வது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணிக்கும் 3வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையில் இன்று போட்டி தொடங்கி உள்ளது.

ஹைதராபாத் அணி மிகவும் வலிமையான பவுலிங் மூலம் எதிரணியை அச்சுறுத்தி வருகிறது. அதேசமயம் பஞ்சாப் அணி கெயில் போன்ற சிக்ஸர் ஹீரோக்கள் மூலம் மிகவும் வலுமையான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருக்கிறது.
இந்த போட்டி தற்போது பஞ்சாப் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஹைதராபாத் அணியில் பழைய வீரர்களே அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்தது. கெயில் அதிரடியாக 63 பந்தில் 104 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப் 3 விக்கெட்டுக்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.
அதன்பின் களிமிறங்கிய ஹைதராபாத் அதிரடியாக ஆடியது. ஆனாலும் இலக்கை அடைய முடியவில்லை. ஹைதராபாத் 20 ஓவரில் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தநிலையில் ஹைதராபாத்தை வீழ்த்தி 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications