Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஹர்திக் பாண்டியாவை தூக்கிய பஞ்சாப் அணி.. மும்பை அணிக்கு செல்லும் அர்ஷ்தீப் சிங்.. டீல் ஓவர்!

மும்பை: மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பஞ்சாப் அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் விக்கெட் கீப்பர் விஷ்ணு வினோத் ஆகியோர் மும்பை அணிக்கு கொடுக்கப்பட இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக ஹர்திக் பாண்டியாவின் டிரேட் பேச்சுவார்த்தையை மும்பை அணி நிர்வாகம் நடத்தி வருகிறது. சிஎஸ்கே, கேகேஆர், ராஜஸ்தான், லக்னோ, டெல்லி உள்ளிட்ட அணிகள் ஹர்திக் பாண்டியாவை வாங்க தீவிரமாக இருந்தன. சிஎஸ்கே அணி தரப்பில் சிவம் துபே மற்றும் கலீல் அஹ்மத் அல்லது அன்சுல் கம்போஜ் ஆகியோரை கொடுக்க முன் வந்தனர்.

Hardik Pandya

ஆனால் மும்பை அணி நிர்வாகம் ஏற்கவில்லை. கேகேஆர் அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி, ஹர்சித் ராணாவை கொடுக்க முன் வந்தனர். அதையும் ஏற்கவில்லை. தொடர்ந்து ராஜஸ்தான் அணி தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், லக்னோ அணி தரப்பில் நிக்கோலஸ் பூரன், டெல்லி அணி தரப்பில் அக்சர் படேல், ஸ்டப்ஸ் ஆகியோரை கொடுக்க முன் வந்தனர்.

இதனால் மும்பை அணி இன்னும் சிறிது நேரம் எடுத்து கொண்டது. தற்போது மும்பை அணியில் இருந்து வெளியேறும் முடிவை ஹர்திக் பாண்டியா எடுத்துவிட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் டிரேட் பேச்சுவார்த்தையில் இறங்கினர்.

அதன்படி மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக பஞ்சாப் அணியிடம் இருந்து அர்ஷ்தீப் சிங் மற்றும் விஷ்ணு வினோத் ஆகியோரை கேட்டிருக்கிறது. இதற்கு பஞ்சாப் அணி உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். மேட்ச் வின்னரான ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை இழக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் டிரேட் தொடர்பாக இரு வீரர்களுடனும் ஆலோசனை நடத்தி இருக்கிறது. தற்போது இரு அணிகளின் நிர்வாகிகள் அனைவருமே இந்த டிரேட் ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. இதன்பின் ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் சில பேப்பர் பணிகள் மட்டுமே மீதமுள்ளது. இவை முடிவடைந்த பின் ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Tuesday, November 3, 2026, 12:20 [IST]
Other articles published on Nov 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+