வாங்கிட்டோம்ல.... ஷாருக்கானை ஏலம் எடுத்த பஞ்சாப் கிங்ஸ்....வைரலாகும் ப்ரீத்தி சிந்தாவின் ரியாக்ஷன்
சென்னை: ஐபிஎல் ஏலத்தில் ஷாருக்கானுக்காக நடந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி கோடிக்கணக்கில் செலவிட்டு வெற்றி பெற்றுள்ளது.
14வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் புதுமுக வீரர்களை எடுப்பதில் பல அணிகளும் ஆர்வம் காட்டி வந்தன.
அந்தவகையில் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஷாருக்கானை பஞ்சாப் கிங்ஸ் அணி அதிக தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

போட்டி
ஷாருக்கானை ஏலம் எடுப்பதற்கு முதலில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஆர்வம் காட்டியது. இதனையடுத்து அவருக்கான ஏலத்தில் பெங்களூரு அணி சேர்ந்தது. இரு அணிகள் போட்டிப்போட்டு கொண்டு ஏலம் கேட்க ஏலம் 2 கோடியை தாண்டிச் சென்றது. இதனால் டெல்லி அணி பின்வாங்கியது.

பஞ்சப் கிங்ஸ்
டெல்லி பின் வாங்கிய பின்பு பஞ்சாப் கிங்ஸ் அணி ஆர்.சி.பிக்கு போட்டியாக ஏலம் கேட்க தொடங்கியது. இரு அணிகளுக்கும் கடும் போட்டி நிலவிய நிலையில் இறுதியில் பஞ்சாப் அணி ஷாருக்கானை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. பெங்களூரு அணி 5 கோடியுடன் பின் வாங்கியது.

ப்ரீத்தி சிந்தா
ஷாருக்கானை ஏலம் எடுத்த உடனே அருகில் இருந்த கொல்கத்தா அணி அதிகாரிகளை பார்த்த பஞ்சாப் அணி உரிமையாளர் ப்ரீத்தி சிந்தா, மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். ஏனெனில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாருக்கான் ஆகும். அவரின் ஷாருக்கானையே வாங்கிவிட்டதாக அவரின்இந்த ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷாருக்கான் விவரம்
தமிழகத்தை சேர்ந்தவரான ஷாருக்கான், உள்நாட்டு தொடர்களில் இதுவரை 31 டி20 போட்டிகளில் விளையாடி 293 ரன்கள் எடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டக் கோப்பையில் அவர் அதிரடி ஆட்டத்தால் 88 ரன்கள் எடுத்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications