Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரு போனா என்ன.. இவரு வந்துட்டாருல்ல.. பஞ்சாப் கணக்கு பலிக்குமா?

சென்னை: ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் ஃபேபியன் ஆலனை ஏலத்தில் எடுத்துள்ளது.

ஐபிஎல் 2020 தொடருக்கான ஏலம் ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. பேட்ஸ்மேன்களை விட பவுலர்களுக்கு இம்முறை மவுஸ் எகிறியுள்ளது. பல அணிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு பவுலர்களையும், ஆல் ரவுண்டர்களையும் எடுத்து வருகின்றன.

அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியும் வியூகம் வகுத்து வீரர்களை தேர்வு செய்துள்ளது.

ஸ்டிராடஜி

ஸ்டிராடஜி

ஏலத்துக்கு முன்பு பல வீரர்களை ரிலீஸ் செய்த பஞ்சாப், எதிர்பார்த்தது போலவே பார்த்து பார்த்து ரக ரகமாக வீரர்களை தேர்வு செய்துள்ளது. இதுவரை ஐந்து முக்கிய வெளிநாட்டு வீரர்களை வாங்கியுள்ளது.

 நம்பர்.1 பேட்ஸ்மேன்

நம்பர்.1 பேட்ஸ்மேன்

டேவிட் மலன், ஜை ரிச்சர்ட்சன், ரைலே மெரிடித், மாய்சஸ் ஹென்ரிக்ஸ், பேபியன் ஆலம் ஆகிய வீரர்களை பர்சேஸ் செய்துள்ளது. டேவிட் மலன், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேன் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்யூட்

சல்யூட்

அதேபோல், பேபியன் ஆலம் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முரட்டு ஆல் ரவுண்டராவார். போன சீசனில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காட்ரெல், விக்கெட்டுகள் பெரிதாக எடுக்காமல் சல்யூட் மட்டும் வைத்துக் கொண்டிருந்ததால், அவருக்கு சல்யூட் வைத்து பஞ்சாப் அனுப்பி விட்டது.

 ஆக்ரோஷமான வீரர்

ஆக்ரோஷமான வீரர்

ஜமைக்கன் கிரிக்கெட்டரான ஆலன், இதுவரை வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 14 ஒருநாள் போட்டியும், 16 டி20 போட்டியும் விளையாடியுள்ளார். டி20-ல் இவரது ஸ்டிரைக் ரேட் 116.67. ஒருநாள் போட்டிகளில் அரைசதம் கூட அடித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக ஒரு ஆக்ரோஷமான வீரராக வளர்ந்து வரும் ஆலனை தங்கள் அணிக்கு தேர்வு செய்து புதிய இரத்தம் பாய்ச்சியுள்ளது பஞ்சாப் படை.

Story first published: Thursday, February 18, 2021, 23:39 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+