Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கடைசி 2 ஓவரில் 46 ரன்கள்.. பஞ்சாப் அணியை காப்பாற்றிய ஷாரூக் கான்.. பிரீத்தி ஜிந்தா ஹேப்பி பாஸ்!

தரம்சாலா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்த்துள்ளது. சிறப்பாக ஆடிய ஷாரூக் கான் 23 பந்துகளில் 41 ரன்கள் விளாசி அசத்தினார்.

ஐபிஎல் தொடரின் 66வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணி சார்பாக ஜோ ரூட் மற்றும் அஸ்வின் நீக்கப்பட்டு, ரியான் பராக் மற்றும் ஆடம் ஷாம்பா சேர்க்கப்பட்டனர். பஞ்சாப் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Punjab Kings set a target of 188 Runs for Rajasthan Royals to Win in IPL 2023

இந்த நிலையில் பஞ்சாப் அணி சார்பாக பிரப்சிம்ரன் சிங் - ஷிகர் தவான் கூட்டணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணி சார்பாக முதல் ஓவரை போல்ட் வீசினார். முதல் ஓவரின் 2வது பந்திலேயே பிரப்சிம்ரன் சிங் 2 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து அதர்வா தய்டே 19 ரன்களிலும், ஷிகர் தவான் 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் பவர்பிளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 48 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

இதையடுத்து கடந்த போட்டியில் சிறப்பாக ஆடிய லிவிங்ஸ்டன் பஞ்சாப் அணியை மீட்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் 13 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதையடுத்து சாம் கரண் - ஜித்தேஷ் சர்மா இணை சேர்ந்தது. சாம் கரண் நிதானமாக ஆட, ஜித்தேஷ் சர்மா வழக்கம் போல் அதிரடியில் வெளுத்து வாங்கினார். இதன் காரணமாக பஞ்சாப் அணி 13 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது.

Punjab Kings set a target of 188 Runs for Rajasthan Royals to Win in IPL 2023

இதையடுத்து சைனி வீசிய 14வது ஓவரில் இரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய ஜித்தேஷ் சர்மா, 44 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சாம் கரணுடன் ஷாரூக் கான் சேர்ந்தார். அடுத்த 4 ஓவர்களில் பஞ்சாப் அணி பெரிதாக ரன் ரேட்டை உயர்த்தவில்லை. இந்த நிலையில் 19வது ஓவரை வீசிய சாஹல் பந்துவீச்சில், ஷாரூக் கான் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் விளாச, பின்னர் சாம் கரண் இரு சிக்சர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாச அந்த ஓவரில் 28 ரன்கள் விளாசப்பட்டது.

பின்னர் போல்ட் வீசிய கடைசி ஓவரில் ஷாரூக் கான் இரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை விளாசி அசத்தினார். அந்த ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் சேர்க்கப்பட்டது. சிறப்பாக ஆடிய ஷாரூக் கான் 23 பந்துகளில் 41 ரன்களும், சாம் கரண் 31 பந்துகளில் 49 ரன்களும் சேர்த்தனர். அதேபோல் ராஜஸ்தான் அணி தரப்பில் நவ்தீப் சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

Story first published: Friday, May 19, 2023, 21:39 [IST]
Other articles published on May 19, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+