For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிங்குடா.. பந்துகளை பறக்கவிட்ட கே.எல். ராகுல்.. டெல்லியை தூசி தட்டி வெற்றி பெற்ற பஞ்சாப்!

ஐபிஎல் போட்டியின் இரண்டாவது ஆட்டத்தில் டெல்லியும், பஞ்சாப்பும் இன்று நேருக்கு நேர் மோதுகிறது.

By Shyamsundar

Recommended Video

நிதானமாக ஆடிய டெல்லி கேப்டன்ஷிப்பில் கலக்கிய அஸ்வின்

பஞ்சாப்: ஐபிஎல் போட்டியில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அதிரடியாக வெற்றிபெற்று இருக்கிறது. மிக எளிதாக இலக்கை அடைந்து சாதனை படைத்துள்ளது.

பஞ்சாப், டெல்லி மோதும் போட்டி பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் நடந்து வந்தது. முதலில் களமிறங்கிய டெல்லி 20 ஓவருக்கு 7 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது.

அதன்பின் களமிறங்கிய பஞ்சாப் எளிதாக அந்த இலக்கை அடைந்து வெற்றிபெற்றுள்ளது. இது ஐபிஎல் போட்டியில் கேப்டன் அஸ்வினின் முதல் போட்டியாகும். முதல் போட்டியில் கேப்டனாக அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

பஞ்சாப் அணியில் மாற்றம்

பஞ்சாப் அணியில் மாற்றம்

பஞ்சாப் அணியில் ஆரோன் பின்ச் விளையாடவில்லை. அவர் தனது திருமணத்திற்காக சொந்த ஊர் சென்றுள்ளார். பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர், யுவராஜ் சிங், டேவிட் மில்லர், மார்கஸ் ஸ்டோனிஸ், அக்சர் பட்டேல், அஸ்வின், ஆண்ட்ரு டை, மோஹித் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர்.

டெல்லி அணியில் மாற்றம்

டெல்லி அணியில் மாற்றம்

டெல்லியில் அணியில் இருந்து காயம் காரணமாக ரபாடா வெளியேறியுள்ளார். தற்போது அந்த அணியில் கம்பீர், கோலின் மூன்றோ, ரிஷாப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ், விஜய் சங்கர், டேனியல் கிறிஸ்டியன், ராகுல் திவேதியா, அமித் மிஸ்ரா, டிரெண்ட் போல்ட், முகமது ஷமி ஆகியோர் உள்ளனர். தற்போது டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

இதில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி நிதானமாக ஆடியது. டெல்லி மண்ணின் மைந்தன் கம்பீர் 42 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். ரிஷாத் பந்த் 28 ரன்கள் எடுத்தார். முஜபீர், மோஹித் சர்மா தலா 2 விக்கெட் எடுத்தனர். அஸ்வின், அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.

ராகுல்

பஞ்சாப் அணி தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடி வந்தது. பஞ்சாப் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறங்கிய கே.எல்.ராகுல் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். வெறும் 14 பந்துகளில் இவர் 51 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து இவர் புதிய சாதனை படைத்துள்ளார்.

டெல்லி பேட்டிங்

டெல்லி பேட்டிங்

இதில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி நிதானமாக ஆடியது. டெல்லி மண்ணின் மைந்தன் கம்பீர் 42 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். ரிஷாத் பந்த் 28 ரன்கள் எடுத்தார். முஜபீர், மோஹித் சர்மா தலா 2 விக்கெட் எடுத்தனர். அஸ்வின், அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட் எடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.

கம்பீர், யுவராஜ்

கம்பீர், யுவராஜ்

இதில் கம்பீர், யுவுராஜ் எப்படி ஆடுகிறார்கள் என்று எல்லோரும் கவனித்தார்கள். கம்பீர் கொஞ்சம் கூட பார்ம் குறையாமல் ஆடினார். இவர் 42 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். ஆனால் யுவராஜ் இன்னும் பார்மிற்கு திரும்பவில்லை. இவர் 22 பந்துகள் பிடித்து வெறும் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

எளிதான வெற்றி

எளிதான வெற்றி

இந்த நிலையில் பஞ்சாப் அணி மிகவும் எளிதாக வெற்றி பெற்று இருக்கிறது. அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 18.5 ஓவரில் 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக லோகேஷ் ராகுல் 51 ரன்கள், கருண் நாயர் 50 ரன்கள் எடுத்தனர். இதனால் ஐபிஎல் 2018 தொடரை பஞ்சாப் அணி வெற்றியோடு தொடங்கி உள்ளது.

Story first published: Sunday, April 8, 2018, 19:39 [IST]
Other articles published on Apr 8, 2018
English summary
Punjab opts bowling against Delhi in IPL 2018. Ashwin took Yuvarj in Punjab's 11 man squad.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+