
பெங்களூரு பவுலிங்
இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி மொகாலியில் தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து, பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக ராகுலும், அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லும் களம் இறங்கினர்.

கெயில் அதிரடி
தொடக்கம் முதலே பஞ்சாப் அணியின் கெய்ல் அதிரடியாக ஆட தொடங்கினார். 6வது ஓவரில் மட்டும் அவர் 24 ரன்களை அதிரடியாக அடித்தார். அவரது விக்கெட்டை கைப்பற்றினால் வெற்றி என்ற கணக்கீட்டின் அடிப்படையில் பெங்களூரு அணியினர் பந்து வீசினர்.

ஆட்டமிழந்த ராகுல்
ஆனால்... கெயிலிடம் அது பலிக்கவில்லை. ரன்கள் வந்து கொண்டே இருந்தன. இந்நிலையில், 7வது ஓவரில் ராகுல் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கெயிலுடன், மயங்க் அகர்வால் கைகோர்த்தார்.

அனல் பறந்த ஆட்டம்
அப்பொழுதும் கெயிலின் அதிரடி நிற்கவில்லை. முன்னை காட்டிலும் ஆட்டத்தில் அனல் பறந்தது. மிக விரைவாக அவர் அரை சதத்தை கடந்தார். மிக எளிதாக ஸ்கோர்போர்டில் ரன்கள் வந்து விழுந்து கொண்டே இருந்தன.

100 ரன்களை எட்டியது
12வது ஓவரில் பஞ்சாப் அணி மிக எளிதாக 100 ரன்களை கடந்தது. கெயிலை ஆட்டமிழக்க வேண்டும் என்ற பெங்களூரு அணியின் முயற்சிக்கு பலன் கிடைக்க வில்லை. அனேகமாக இந்த போட்டியிலும் பெங்களூரு அணிக்கு தோல்வி தானோ என்று ரசிகர்கள் பேசத் தொடங்கி உள்ளனர்.


Click it and Unblock the Notifications