For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

காட்டடி மன்னன் கெயில் 99 ரன்கள்.. பெங்களூருக்கு 174 ரன்கள் இலக்கு.. ஜெயிக்குமா..? ரசிகர்கள் கவலை

சண்டிகர்: மொகாலியில் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கெய்ல், அதிரடியாக ஆடியதால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 173 ரன்களை குவித்துள்ளது.

பஞ்சாப் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5வது இடத்தில் உள்ளது. எந்த போட்டியிலும் ஜெயிக்காத, புள்ளி கணக்கை தொடங்காத பெங்களூரு அணி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான போட்டி மொகாலியில் தொடங்கியது. டாஸ் வென்ற பெங்களூரு, முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து, பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக ராகுலும், அதிரடி மன்னன் கிறிஸ் கெய்லும் களம் இறங்கினர்.

கெயில் அதிரடி

கெயில் அதிரடி

இந்த போட்டியில் ஒரு முடிவோடு வந்திருப்பது கெயிலின் அதிரடி ஆட்டத்திலேயே தெரிந்தது. தொடக்கம் முதலே அவர் அனாயசமாக ஆட தொடங்கினார். 6வது ஓவரில் மட்டும் 24 ரன்களை அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

ராகுல் 15 ரன்கள்

ராகுல் 15 ரன்கள்

அவரை அவுட்டாக்க பெங்களூரு பந்துவீச்சாளர்கள் முயல.. அதில் சிக்கிக் கொண்டார் ராகுல். 7வது ஓவரில் அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுதது வந்தவர் மயங்க் அகர்வால். கெயிலுடன் இருப்பதால் பெரிதாக ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 15 ரன்களே எனக்கு போதும் என்று திருப்தியடைந்து வெளியேறினார்.

எளிதாக 100 ரன்கள்

எளிதாக 100 ரன்கள்

ஆனால், கெயிலின் வேகம் நிற்கவில்லை. விரைவாக அவர் அரை சதத்தை கடந்தார். 12வது ஓவரில் பஞ்சாப் அணி மிக எளிதாக 100 ரன்களை கடந்தது. கெயிலை ஆட்டமிழக்க வேண்டும் என்ற பெங்களூரு அணியின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.

ரன்வேகம் குறைந்தது

ரன்வேகம் குறைந்தது

கெயிலை தவிர உடன் இருந்தவர்கள் எல்லாம் ஆட்டமிழந்தனர். 13வது ஓவருக்கு பிறகு.. அணியின் ரன் வேகம் மெதுவாக குறைந்தது. சர்பராஸ் கான், கர்ரன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததே அதற்கு காரணம்.

99 ரன்கள்

99 ரன்கள்

ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் நங்கூரமாக நின்ற காட்டடி மன்னன் சதத்தை நெருங்கி கொண்டிருந்தார். எவ்வளவோ முயன்றும் அவரால் சதத்தை எடுக்க முடியவில்லை. மாறாக இறுதி வரை ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்தார். அதில் 70 ரன்கள் பவுண்டரிகள்,சிக்சர்களில் வந்தது.

173 ரன்கள் குவிப்பு

173 ரன்கள் குவிப்பு

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. தொடக்கத்தில் அருமையான ரன் ரேட்டில் இருந்த பஞ்சாப் அணி, நிச்சயமாக 200 ரன்களை கடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

Story first published: Saturday, April 13, 2019, 23:19 [IST]
Other articles published on Apr 13, 2019
English summary
Kings xi Punjab scores 173 runs against royal challengers Bangalore.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+