Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோஹ்லியை முந்தினார் புஜாரா… தரவரிசையில் 2வது இடத்தைப் பிடித்தார்!

டெல்லி: ஐசிசி தரவரிசையில் கேப்டன் விராட் கோஹ்லியை முந்தி, சிறந்த பேட்ஸ்மேனுக்கான பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் சத்தேஸ்வர் புஜாரா.

டெஸ்ட் போட்டி தான் கிரிக்கெட்டின் உண்மையான டெஸ்ட். இந்த டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசியின் புதிய தரவரிசையில், இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Puraja No2 in ICC ranking


பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில், 6வது இடத்தில் இருந்த புஜாரா, 2வது இடத்துக்கு முன்னேறினார். கேப்டன் விராட் கோஹ்லி தொடர்ந்து 5வது இடத்தில் உள்ளார்.

ஓப்பனர் முரளி விஜய், 8 இடங்கள் முன்னேறி 28வது இடத்திலும், ரோஹித் சர்மா 7 இடங்கள் முன்னேறி, 46வது இடத்திலும் உள்ளனர். கேஎல் ராகுல் 9வது இடத்திலும் ரஹானே 15வது இடத்திலும் ஷிகார் தவான் 29வது இடத்திலும் உள்ளனர்.

பவுலர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மீண்டும் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். ரவிச்சந்திரன் அஸ்வின் 4வது இடத்தை தக்க வைத்தார். புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, 28 மற்றும் 30வது இடத்தில் உள்ளனர்.

ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில், ஜடேஜா தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அஸ்வின் 3-வது இடத்தை மீண்டும் பிடித்துள்ளார்.
Story first published: Wednesday, November 29, 2017, 18:43 [IST]
Other articles published on Nov 29, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+