Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அஸ்வின் செய்த உலக சாதனை.. முதலிடம் பிடித்து அசத்தல்.. பேட்டிங் ஆடுகளத்தில் 6 விக்கெட்டுகள்

அகமதாபாத் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் மகத்தான சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.

குறிப்பாக இந்திய அளவில் அதிக விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார்.

ஆனால் அஸ்வினின் சாதனையை சக இந்திய அணி வீரர்களே அங்கீகாரம் கொடுக்காமல் கேலி செய்தார்கள்.

விமர்சனம்

விமர்சனம்

அஸ்வின் சுழற்பந்துக்கு சாதகமான ஆடுகளத்தில் தான் பந்து வீசி விக்கெட் எடுப்பார் என்றும் ஆடுகளம் கொஞ்சம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தாலும் தடுமாறுவார்கள் என்றும் பலரும் கூறியிருக்கிறார்கள். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளத்தில் பந்து வீசும் போது அஸ்வினின் கை இழுத்துக் கொள்வதாக அண்மையில் ஸ்ரீகாந்த் கூறியிருந்தார். மேலும் இது போன்ற ஆடுகளத்தில் எல்லாம் ஹர்பஜன் , அணில் கும்ப்ளேவும் பந்து வீசி இருந்தால் ஆயிரம் விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார்கள் என்று யுவராஜ் சிங்கூறியிருந்தார்.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

இந்த நிலையில் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் கொஞ்சம் கூட சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக எடுபடவில்லை.எனினும் அஸ்வின் கடுமையாக போராடி பேட்டிற்கு சாதகமான ஆடுகளத்தில் ரன்களை கசிய விடாமல் கட்டுப்படுத்தி அசத்தியிருக்கிறார். அஸ்வின் 47.2 ஓவர்களை வீசி வெறும் 91 ரன்களை மட்டும் தான் விட்டுக் கொடுத்திருக்கிறார். அதாவது ஒரு நாள் போட்டியில் கிட்டத்தட்ட ஒரு அணி வீச வேண்டிய ஓவர்களை அஸ்வின் மட்டுமே வீசி இருக்கிறார்.

6 விக்கெட்

6 விக்கெட்

இதில் ஒரு ஓவருக்கு கிட்டத்தட்ட இரண்டு கண்களை மட்டுமே கொடுத்திருக்கிறார்.அத்துடன் மட்டுமல்லாமல் ஆறு விக்கெட்டுகளையும் அஸ்வின் கைப்பற்றி இருக்கிறார். இதன் மூலம் தான் அனைத்து விதமான ஆடுகளத்தில் சிறப்பாக பந்து வீசுவேன் என்று தன் மீது விமர்சனம் வைத்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்று பெருமையும் அஸ்வின் பெற்றிருக்கிறார்.

மகத்தான சாதனை

மகத்தான சாதனை

அதோடு மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அதிக விக்கெட்களை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையை அவர் படைத்திருக்கிறார். இதற்கு முன்பாக அணில் கும்ப்ளே 20 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 111 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் , அஷ்வின் 22 போட்டிகளில் விளையாடி தற்போது வரை 113 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதனை அஸ்வினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Story first published: Friday, March 10, 2023, 17:42 [IST]
Other articles published on Mar 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+