Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் கூட பயமில்லை.. கடைசி பந்தில் ஹீரோவான அஸ்வின்.. வேற லெவல் சாமர்த்தியம்

மெல்போர்ன் : 2022 டி20 உலககோப்பையில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வினின் சாதூர்யமான செயலால் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

விராட் கோலி பேட்டிங்கில் 53 பந்தில் 82 ரன்கள் விளாசினாலும். கடைசி கட்டத்தில் இந்தியாவை காப்பற்றியது அஸ்வின் தான்.

நேற்று அஸ்வின் ஃபில்டிங்கில் சொதப்பினாலும், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் கலக்கினார்.

ஃபில்டிங் சறுக்கல்

ஃபில்டிங் சறுக்கல்

நேற்று அஸ்வின் ஃபில்டிங்கில் ஈடுபட்ட போது ஷான் மசூத் 24 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச்சை அஸ்வின் பிடித்தாலும், அது கேட்ச் இல்லை என அறிவிக்கப்பட்டது. இதே போன்று, அஸ்வின் சர்கிளில் நின்ற போது பந்தை 2 முறை தவறவிட்டார். இப்படி ஃபில்டிங்கில் அஸ்வின் சறுக்கினாலும் பந்துவீச்சில் காப்பாற்றினார்.

அசத்தல் பந்துவீச்சு

அசத்தல் பந்துவீச்சு

இதே போன்று சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் ஒரு ஓவரில் 21 ரன்களை விட்டு கொடுத்தார். ஆனால் 3 ஓவர் வீசிய அஸ்வின் வெறும் 23 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்தார். அஸ்வின் பந்தவீச்சில் ஒரு விக்கெட் எடுத்திருப்பார். ஆனால் ஸ்பைடி கேமிராவில் பட்டு, பந்து அது கேட்சாமல் மிஸ் ஆனது.

சாதூர்யமான பேட்டிங்

சாதூர்யமான பேட்டிங்

இதனிடையே, கடைசி 2 பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது தினேஷ் கார்த்திக் இடதுபுறம் செல்ல பந்தை அடிக்க முயன்ற போது ஸ்டம்பிங் செய்தார். இதனையடுத்து,கடைசி ஒரு பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது அஸ்வின் களத்துக்கு வந்தார். எந்த ஒரு நெருக்கடியும் இல்லாமல் அஸ்வின் பேட்டிங் செய்ய வந்த போது நவாஸ் வீச போகும் பந்து WIDE ஆக தான் வரப் போகிறது என்பதை அறிந்து அதனை அடிக்காமல் நின்றார்.

கடைசியில் பவுண்டரி

கடைசியில் பவுண்டரி

இதனால் அந்த பந்து WIDE ஆனது. இதனைத் தொடர்ந்து கடைசி பந்தில் ரன் ஓட விடக் கூடாது என்பதற்காக ஃபில்டர்களை பாபர் அசாம், உள்ளே நிற்க வைக்க, அந்த பந்தை அசால்டாக தூக்கி பவுண்டரிக்கு விரட்டினார் அஸ்வின். இதன் மூலம் இந்தியா வெற்றி பெற்றது. அஸ்வினின் புத்திசாலித்தனத்தால் தான் இந்தியா வென்றது என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Monday, October 24, 2022, 12:35 [IST]
Other articles published on Oct 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+