Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Ind vs WI -ஒரே போட்டியில் 12 விக்கெட்.. அஸ்வின் அசத்தல் சாதனைகள் விவரம்.. ஹர்பஜன் சாதனை முறியடிப்பு

டோமினிக்கா : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் அஸ்வின் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதன் மூலம் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டார். தற்போது அதற்கு அஸ்வின் தக்க பதிலடி கொடுத்திருக்கிறார்.

ashwin records

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது அஸ்வின் தன்னுடைய மாயாஜால சுழற்பந்துவீச்சால் அந்த அணியின் முக்கிய வீரர்கள் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் அந்த அணி 150 ரன்களில் ஆட்டமிழக்க, அதில் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதே போன்று இரண்டாவது இன்னிங்சிலும் அஸ்வின் விக்கெட் வேட்டை தொடர்ந்தது. ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் எதிர் கொள்ள முடியாமல் தடுமாறி வந்தனர். கேப்டன் பிராத்வெயிட், பிளாக்வுட், எதனாஸ், அல்சாரி ஜோசப் ,ரஹீம் கார்ன்வால்,கீமர் ரோச், வாரிகண் ஆகியோரை அஸ்வின் வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்சில் 21.3 ஓவர்களை வீசி 71 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த அஸ்வின் ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் ஒரே ஆட்டத்தில் 12 விக்கெட்டுகளை அஸ்வின் சாய்த்தார். இதனையடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் 482 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோன்று ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வீரர்கள் பட்டியலில் அஸ்வின் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஹர்பஜன் 707 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது அஸ்வின் அவரை பிண்ணுக்கு தள்ளி 708 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மேலும் வெளிநாட்டு மண்ணில் அஸ்வின் சிறந்த செயல்பாடாக இது பார்க்கப்படுகிறது. அதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் பட்டியலில் அஸ்வின் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் எதிராக அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமையும் அஸ்வினுக்கு கிடைத்திருக்கிறது. அதேபோன்று அஸ்வின் ஒரே போட்டியில் இரண்டு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை ஆறு முறை வீழ்த்தி இருக்கிறார்.

Story first published: Saturday, July 15, 2023, 3:55 [IST]
Other articles published on Jul 15, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+