Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்குமா? ரோகித் சர்மா எடுக்கும் முக்கிய முடிவு.. என்ன சவால்?

டிரிண்டாட்: மேந்றகிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இன்று இந்தியா மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர், டி20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பலமான அணியாக கருதப்படுகிறது. அதுவும் அத்ன் சொந்த மண்ணில் வீழ்த்துவது எளிதான காரியம் கிடையாது.

கடும் சவால்

கடும் சவால்

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஓய்வு வழங்கப்பட்ட ரோகித், ரிஷப் பணட், தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் போன்ற வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். மேலும் தமிழக வீரர் அஸ்வினும் 8 மாதங்களுக்கு பிறகு டி20 அணிக்கு திரும்பியுள்ளார். இதனால், இன்றைய போட்டியில் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதே கடின சவாலாக இருக்கும்.

சுழற்பந்துவீச்சு பட்டாளம்

சுழற்பந்துவீச்சு பட்டாளம்

சுழற்பந்துவீச்சை பொறுத்த வரை இந்திய அணியில் ஏற்கனவே கடும் போட்டி நிலவுகிறத. சாஹல் செம பார்மில் உள்ளார்.இரண்டாவதாக ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் இருக்கிறார். சமீபத்தில் பேட்டிங்கை நிரூபித்த அக்சர் பட்டேலும் அணியில் உள்ளார். இதை தவிர இளம் வீரர் ரவி பிஸ்னாயும் இருக்கிறார்.

ஏன் அஸ்வின் வேண்டும்?

ஏன் அஸ்வின் வேண்டும்?

இவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தான் அஸ்வின் பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும். அஸ்வின் விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும், டி20 கிரிக்கெட்டில் ஒரு முனையில் ரன்களை கட்டுப்படுத்தி எதிரணிக்கு நெருக்கடியை தருபவர். இதனால் அஸ்வின் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும், மற்ற பவுலர்களுக்கு விக்கெட் கிடைக்கும்.

Recommended Video

IND vs WI Ravichandran Ashwin முக்கிய விக்கெட்டுகளை எடுத்து அசத்தல் *Cricket
ரோகித் முடிவு

ரோகித் முடிவு

மேலும் டி20 உலகக் கோப்பை தொடரில் அஸ்வின் தான் அதிக விக்கெட்டுகளை இந்தியாவுக்காக வீழ்த்தி இருக்கிறார். இதனால் அஸ்வினின் அனுபவத்தை பயன்படுத்தி கொள்ள ரோகித் சர்மா விரும்புகிறார். இதனால் இந்த தொடரில் சாஹலுக்கு சில போட்டியில் ஓய்வு அளித்துவிட்டு அஸ்வினை ரோகித் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Friday, July 29, 2022, 16:34 [IST]
Other articles published on Jul 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+