சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணி, கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் ஐந்து ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருக்கிறது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி ஆறு தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் தனது சொந்த அணியில் தமிழக கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின் கிண்டல் செய்து இருக்கிறார். ராஜஸ்தான் அணிக்கு ரசிகர்களை திரட்டும் வகையில் தமிழக மக்களின் ஆதரவை தமிழக வீரர் அஸ்வின் சமூக வலைத்தளம் மூலம் கேட்டு வந்தார்.

தமிழ் பேசும் வீரர்கள் இங்கு இருப்பதால் எங்கள் அணிக்கு ஆதரவு கொடுங்கள் என்று ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போல் என்று தொடர்ந்து வீடியோவை போட்டு வந்தார். இந்த நிலையில் அஸ்வின் இந்த வீடியோவை வெளியிட தொடங்கியதிலிருந்து ராஜஸ்தான் அணிக்கு சரிவு வந்து கொண்டிருக்கிறது.இதனால் ரசிகர்கள் அஸ்வினை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்த அஸ்வின் இன்று உடற்பயிற்சியாளர் நிபுணர் ராஜா மணியுடன் சேர்ந்து வீடியோவை பதிவிட்டுள்ளார். ராஜஸ்தான் அணி தற்போது வெற்றி பெற முடியாமல் 10 புள்ளிகளிலே தங்கி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.அதில், எங்கள் அணி 10 புள்ளியிலேயே தங்கி அங்கேயே படுத்து தூங்கிவிட்டது. அங்கேயே சமைத்து சாப்பிட்டு கொண்டும் இருக்கிறோம்.

10 புள்ளியை விட்டு தாண்ட முடியவில்லை. அதேபோன்று எங்களுடைய ஹல்லா போல் கொஞ்சம் நல்லா போல் வீடியோவையும் ரசிகர்கள் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். அதனையும் நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஒரு காலத்தில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது என்றால் அதனை மக்கள் பார்க்க கூட மாட்டார்கள்.
இப்போது திட்டவாவது செய்கிறீர்களே என்று திருப்தி மட்டும் இருக்கிறது. இதனால் அல்லா போல் கொஞ்சம் ஹல்லா போல் என்ற வீடியோ தற்போது ஹல்லா போல் கொஞ்சம் மெல்லமா போல் என்று நாங்கள் மாற்றி விட்டோம் என அஸ்வின் கூறினார்.இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற ராஜஸ்தான் அணி முயற்சி செய்யும் என்று அவர் அந்த வீடியோவில் உறுதி அளித்தார்.