Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து அஸ்வின் பேச்சு.. மனநல நிபுனர்கள் உதவியை நாடியதாக கருத்து

மும்பை : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து 37 வயதான தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் பேசியிருக்கிறார். நடப்பு உலக கோப்பை தொடரில் இடம் பெற்ற அஸ்வின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே ஒரு லீக் போட்டியில் மட்டும் தான் விளையாடினார்.

அதன் பிறகு அஸ்வினுக்கு எந்த போட்டியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் வரும் டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி தொடங்க உள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் அஸ்வின் இடம்பெற்றுள்ளார்.

R Ashwin speaks about when he will retire from cricket

இந்த நிலையில் சக தமிழக வீரர் பத்ரிநாத்துடன் நடந்த நேர்காணலில் அஸ்வின் தம் வாழ்க்கையில் உள்ள இருண்ட பக்கம் குறித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர் நான் சாமர்த்தியமாக ஒன்றும் பேசவில்லை. ஆனால் கடந்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளாக நான் மிகவும் இருண்ட பகுதியில் சிக்கிக் கொண்டது போல் உணர்ந்தேன்.

என்னுடைய மனநலத்திற்காக நான் நிபுணர்களின் உதவியை கூட நாடி இந்த இரண்டு காலத்தில் நான் வாழ்க்கையில் அனைத்துமே தயாராக வேண்டும் என்பது குறித்து முடிவெடுத்தேன். கிரிக்கெட்டுக்கு பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தற்போது தயார் செய்து வந்தேன். ஆனால் இடைப்பட்ட காலத்தில் கிரிக்கெட் தொடர்பாகவும் கடுமையாக உழைத்தேன்.

பேட்டிங்களும் கவனம் செலுத்த வேண்டும் என பயிற்சி செய்தேன். இதற்காக அமெரிக்காவுக்கு சென்று பேஸ் பால் பயிற்சி கூட எடுத்து வந்தேன். எந்த நாள் எனக்கு உத்வேகம் குறைகிறதோ! ஐயோ காலையில் எழுந்திருக்கும் போது இன்று பந்து வீச வேண்டுமா பேட்டிங் செய்ய வேண்டுமா என்ற அலுப்பு ஏற்படுகிறதோ, அப்போதுதான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடியும் என்று அர்த்தம்.

அது நடந்தால் உடனடியாக நான் கிரிக்கெட்டை விட்டு விலகி விடுவேன். அனைவருக்கும் நன்றி என் அடுத்த வாழ்க்கையில் ஒரு பகுதி குறித்து யோசிக்க போகிறேன் என்று அனைவருக்கும் அறிவித்து விடுவேன் என்று அஸ்வின் கூறியுள்ளார். 37 வயதான அஸ்வின் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். டி20 ஒருநாள் என அப்போது அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, December 2, 2023, 21:13 [IST]
Other articles published on Dec 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+