Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உங்க வேலையை காட்டுட்டிங்களே. இந்திய அணிக்கு வந்ததும் ரஹானே செய்த காரியம்..கடுப்பான சிஎஸ்கே ரசிகர்கள்

சென்னை : இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்தவர் ரஹானே. ஆனால், அவர் சரியாக விளையாடவில்லை என்று கூறி, இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். அத்துடன் மட்டுமல்லாமல், பிசிசிஐயின் ஒப்பந்த பட்டியலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனையடுத்து, அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்ட ரஹானே, தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனை எல்லாம் பார்த்துவிட்டு, இது ரனே 2.0 என்று ரசிகர்கள் பாராட்டினர்.

Rahane batting performances dips after WTC Finals calls up

29 பந்துகளில் 71 ரன்கள், 27 பந்துகளில் 61 ரன்கள் என்ற ரனே தெறிக்கவிட்டார். இதனையடுத்து ரஹானேவை தேர்வுக்குழுவினர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் ரஹானே சேர்க்கப்பட்டார்.

ஆனால், இந்த அறிவிப்புகு பிறகு ரஹானே சேர்க்கப்படவில்லை என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டினர். நடப்பு ஐபிஎல் தொடரில், இந்தய அணிக்கு சேர்க்கப்பட்டதற்கு முன் சராசரியாக ரஹானே 52 ரன்கள் அடித்து, ஸ்ட்ரைக் ரேட்டை 199 என்ற அளவில் வைத்திருந்தார். ஆனால், இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்த உடன், சராசரி 19 என்ற அளவிலும், ஸ்ட்ரைக் ரேட் 114 என்ற அளவிலும் சரிந்துவிட்டது.

இதன் மூலம் ரஹோனே இந்திய அணிக்குள் வந்ததும் பழைய மாதிரி மாறிவிட்டதாக கூறி, கைதி படத்தில் கார்த்தி சொல்வது போல் உன் புத்தியை காமிச்சிட்டல சார் என்று மீம்ஸ் போட்டு விமர்சித்து வருகின்றனர். இதற்கு ரஹானே சிஎஸ்கேவின் முக்கிய ஆட்டத்தில் பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்.

Story first published: Wednesday, May 10, 2023, 23:12 [IST]
Other articles published on May 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+