Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்த பவுலிங் வேலைக்கு ஆகாது.. ஸ்டைல மாத்துங்க அஸ்வின்.. சக இந்திய வீரர் பாய்ச்சல்!

கேப் டவுன்: இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்க நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட சென்று இருக்கிறது. இந்திய வீரர்கள் அனைவரும் நேற்று இரவு தென்னாப்பிரிக்காவிற்கு சென்றடைந்தனர்.

இந்தியா அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடாது என்பதால் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்திய அணியின் கேப்டனாக கோஹ்லி மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.

தற்போது இந்திய டெஸ்ட் அணியில் இருக்கும் அஸ்வின் மற்றும் ரவீந்தர் ஜடேஜா குறித்து ரஹானே கருத்து தெரிவித்து இருக்கிறார். அஸ்வின் தனது பவுலிங் ஸ்டைலை மாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்க தொடர்

தென்னாப்பிரிக்க தொடர்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதும் நீண்ட தொடர் வரும் ஜனவரி 5ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த போட்டி பிப்ரவரி 24ம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது. இந்த தொடரில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா மொத்தம் 3 டெஸ்ட், 6 ஒருநாள் மட்டும் 3 டி-20 போட்டிகள் விளையாடும்.

ரஹானே பேச்சு

ரஹானே பேச்சு

தற்போது இந்த தொடர் குறித்து ரஹானே பேசியிருக்கிறார். அதில் ''இந்திய அணியின் பக்கம் ரவி சாஸ்திரி இருக்கும் வரை எங்களுக்கு கவலை இல்லை. அவர் எங்களை மிகவும் நேர்மறையாக சிந்திக்க வைக்கிறார். நாங்கள் அவர் வந்த பின் போட்டிகளை டென்ஷன் இல்லாமல் என்ஜாய் செய்து விளையாடுகிறோம். நன்றாக விளையாடாத நபர்களையும் அவர் ஊக்குவிப்பார்'' என்று கூறியுள்ளார்.

அஸ்வின் குறித்து கருத்து

அஸ்வின் குறித்து கருத்து

அஸ்வின் குறித்து பேசிய ரஹானே ''அஸ்வினும், ரஹானேவும் நல்ல பவுலர்கள்தான். அவர்கள் இந்தியாவில் நன்றாக விளையாடுகிறார்கள். அதேபோல் வெளிநாட்டிலும் அவர்கள் நன்றாக விளையாட வேண்டும். அவர்கள் கொஞ்சம் மாறவேண்டும். தங்கள் பவுலிங் முறையை மாற்றிக் கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

கற்றுக் கொள்ள வேண்டும்

கற்றுக் கொள்ள வேண்டும்

இது குறித்து மேலும் பேசிய அவர் ''இருவரும் இன்னும் கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டும். மொயின் அலி, நாதன் லியான் போன்ற வீரர்கள் வெளிநாட்டில் விளையாடும் போது வித்தியாசமாக விளையாடுகிறார்கள். அவர்களிடம் இருந்து அஸ்வினும், ஜடேஜாவும் கற்றுக்கொள்ள வேண்டும். அது மட்டுமே டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு உதவியாக இருக்கும் இங்கு விளையாடும் பவுலிங் ஸ்டைல் அங்கு சரியாக இருக்காது.'' என்று கூறியுள்ளார்.

Story first published: Friday, December 29, 2017, 13:25 [IST]
Other articles published on Dec 29, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+