Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

140 கிலோ..! 6.6 அடி உயரம்..! இந்தியாவை அதகளம் பண்ண வரும் அந்த மலை மனிதர்..! அட்டாக் பிளான்

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்திய அணிக்கு எதிரான வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியில் புதிய வீரராக ரஹீம் கார்ன்வால் என்ற புதுமுக வீரர் இடம்பிடித்து உள்ளார்.

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என இந்திய அணி வென்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தானது. இன்னும் 2 ஒருநாள் போட்டிகள் மீதமுள்ளன. அதில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும்.

பின்னர் இரு அணிகளுக்கும் இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் நடக்கப் போகிறது. அந்த போட்டிகள் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் போட்டி நிச்சயம் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எளிதான காரியம் அல்ல

எளிதான காரியம் அல்ல

சொந்த மண்ணில் ஆடுவது வெஸ்ட் இண்டீசுக்கு கூடும் பலம். ஆனாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 அணியான இந்திய அணியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பது அந்த அணிக்கு புரிந்தே இருக்கும்.

அணி அறிவிப்பு

அணி அறிவிப்பு

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஹோல்டர் தலைமையிலான 13 வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்கள் விவரம்

வீரர்கள் விவரம்

வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் : ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), க்ரைக் ப்ராத்வெயிட், டேரன் பிராவோ, ப்ரூக்ஸ், ஜான் காம்ப்பெல், ரோஸ்டன் சேஸ், கார்ன்வால், ஷேன் டவ்ரிச், ஷேனான் காப்ரியல், ஷிம்ரன் ஹெட்மயர், ஷாய் ஹோப், கீமோ பால், கீமார் ரோச்.

வந்தார் புதுமுகம்

வந்தார் புதுமுகம்

இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய வீரராக ரஹீம் கார்ன்வால் என்ற புதுமுக வீரர் இடம்பிடித்துள்ளார். இவரை பற்றிய சிறப்பம்சம் இருக்கிறது. அது என்னவெனில் அவர் ஒரு வித்தியாசமான கிரிக்கெட் வீரர் ஆவார்.

140 கிலோ, 6.6 அடி

140 கிலோ, 6.6 அடி

ஏனென்றால் இவரது உயரம் 6.6 அடி. து எடை பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு 140 கிலோ கொண்ட மிகப் பிரம்மாண்டமான தோற்றம் கொண்டவர். விசித்திரமான தோற்றம் மிரள வைக்கிறது. ஏனென்றால் இவரது உயரம் 6.6 அடி. து எடை பிரம்மிக்க வைக்கும் அளவிற்கு 140 கிலோ கொண்ட மிகப் பிரம்மாண்டமான தோற்றம் கொண்டவர். விசித்திரமான தோற்றம் மிரள வைக்கிறது.

புதிய சாதனை

புதிய சாதனை

அப்படி இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக இவர் விளையாடும் பட்சத்தில் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக எடையுடன் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைப்பார். வெஸ்ட் இண்டீசின் முதல் தரப் போட்டிகளில் விளையாடி வரும் காம்ப்பெல், பயிற்சியின் போது இந்திய அணியின் வீரர்களான கோலி, புஜாரா, ரகானே ஆகியோரை வீழ்த்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, August 11, 2019, 12:16 [IST]
Other articles published on Aug 11, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+