Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தட்டி தட்டி கேட்ச் பிடித்த ராகுல் சஹர்... ரசிகர்களை குஷிபடுத்திய தரமான சம்பவம்

துபாய் : மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற நேற்றைய முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் மும்பை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கூட்டு முயற்சியால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. ஒவ்வொருவரும் தங்களது பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை அந்த அணிக்கு அளித்தனர்.

போட்டியில் இரண்டு ஓவர்களை போட்ட இளம் வீரர் ராகுல் சஹர், அதிக ரன்களை கொடுத்தார். இருந்தபோதிலும் பீல்டிங்கில் கலக்கினார். அவர் தாவி தாவி பிடித்த கேட்ச் ஒன்று ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

மும்பை அணி வெற்றி

மும்பை அணி வெற்றி

மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையிலான நேற்றைய முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. அந்த அணி இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடி வருகிறது. அணி வீரர்கள் அனைவரும் கூட்டு முயற்சியாக அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

மற்ற வீரர்கள் சிறப்பு

மற்ற வீரர்கள் சிறப்பு

நேற்றைய தகுதிச்சுற்று போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர்கள் சிறப்பாக விளையாடினர். ரோகித் சர்மா மற்றும் கீரன் பொல்லார்ட் ஆகிய இரண்டு முக்கிய விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையிலும், அடுத்துவந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணியை இறுதிப்போட்டிக்கு முன்னேற்றினர்.

57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

பும்ரா, போல்ட் உள்ளிட்டவர்களின் அதிரடி பௌலிங்கும் அணிக்கு சிறப்பை சேர்த்தது. அவர்கள் அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை 57 ரனகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளனர். மேலும் ஒவ்வொரு வீரரும் சிறப்பான பீல்டிங்கை வழங்கினர்.

பீல்டிங்கில் சிறப்பு

பீல்டிங்கில் சிறப்பு

பௌலர் ராகுல் சஹர் இரண்டு ஓவர்களை போட்ட நிலையில், அதிக ரன்களை கொடுத்தார். ஆயினும் அவரது பீல்டிங் நேற்றைய போட்டியில் முக்கிய கவனம் பெற்றது. போட்டியில் 42 ரன்களை அடித்த டெல்லி வீரர் அக்சர் படேலின் விக்கெட்டை எடுப்பதற்காக அவர் தட்டி தட்டி பிடித்த கேட்ச் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

Story first published: Friday, November 6, 2020, 9:31 [IST]
Other articles published on Nov 6, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+