Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு தலைவன் எப்படி இருக்கனும் தெரியுமா? ரோகித் சர்மாவை ஒப்பிட்டு ராகுல் சாஹர் பேச்சு

மும்பை: ஹர்திக் பாண்டியா, 2024 ஐபிஎல் தொடருக்கு முன்பு, குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். அவர் 2015 முதல் 2021 வரை விளையாடிய மும்பை அணிக்கு மீண்டும் இணைந்தார்.ஆனால், எம்ஐ ஒரு அதிர்ச்சியூட்டும் முடிவாக, ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக்கை கேப்டனாக நியமித்தது. இந்த முடிவு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

மேலும் எம்ஐ-யின் போட்டிகளின் போது ஹர்திக் ரசிகர்களால் அவமானப்படுத்தப்பட்டார். பலரும் அவருக்கு எதிர்ப்பு குரல் கொடுத்தனர். சில ரசிகர்கள், 2011 முதல் ரோஹித்க்கு தகுந்த மரியாதை வழங்கப்படவில்லை என்று தெரிவித்ததனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் சாஹர், இது ஒரு அணிக்கும் அதன் வீரருக்கும் இடையேயான உறவைப் பொறுத்தது என்று கூறினார்.

Rahul Chahar

இது குறித்து பேசிய அவர், "ஒவ்வொரு அணிக்கும் அதன் நேரம் வரும், புதிய கேப்டன்கள் வருவார்கள். இதைப் பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. இது அவர்களின் முடிவு. மற்றும் யாரை கேப்டனாக்க விரும்புகிறார்கள் என்பதைப் பொறுத்தது. ஆனால், நீங்கள் அணிக்காக என்ன செய்கிறீர்கள் என்பது முக்கியம் என்று நினைக்கிறேன்."

"ஒரு வீரராக, ரோஹித் மிகவும் அமைதியானவர். உங்களுக்கு யாரிடமிருந்தும் எந்த தேவையும் இல்லையென்றால் எல்லாம் சரியாக இருக்கிறது. நீங்கள் உங்கள் 100% கொடுக்க வேண்டும், எந்த முகத்திலும் எதுவும் தெரியக் கூடாது. இது எம்ஐ மட்டுமல்ல, எந்த அணியாக இருந்தாலும் சரி".

"அவர் நம்பிக்கை அளிக்கும் விதம் மிகவும் முக்கியமானது என்று நினைக்கிறேன். ஒரு கேப்டன் ஒரு வீரரை நம்புவது மிகவும் முக்கியம். எனக்கு நினைவில் இருக்கிறது, அவர் என் முகத்தைப் பார்த்து நான் அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தால், என் தோளில் கை வைத்து சில சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசுவார்."

"கிரிக்கெட் பற்றி மட்டுமல்ல, 'நிம்மதியாக இரு' என்று சொல்வார். அவர் மிகவும் அமைதியானவர்," என்று அவர் கூறினார்."ஒரு தலைவராக, அவர் எல்லோரையும் எப்படி கையாள வேண்டும் என்று தெரிந்தவர். பும்ராவுக்கு அதே விஷயத்தை அவர் சொல்ல மாட்டார், அவருக்கு ஏதாவது அறிவார்ந்த விஷயத்தை சொல்வார். எந்த வீரருக்கு என்ன சொல்ல வேண்டும், யாருடைய அழுத்தத்தை குறைக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும்,"

"ஒரு சம்பவத்தை மறக்க முடியாது. 2020-ல் டெல்லிக்கு எதிராக ஒரு அரையிறுதி ஆட்டம் இருந்தது. நான் இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் கொடுத்தேன். ஆட்டத்திற்கு பிறகு தலையை கவிழ்ந்து இருந்தேன். ரோஹித் வந்து, அணியை முன்னின்று வழிநடத்து என்று கூறினார். ஒரு ஆட்டம் மோசமாக போனால் என்ன, முழு சீசனும் நன்றாக இருந்தது இல்லையா? முன்னால் சென்று வழி காட்டு என்று கூறினார். அவர் எப்போதும் எங்களை ஊக்குவிக்கிறார்," என்று ராகுல் சாஹர் கூறினார்.

Story first published: Thursday, September 4, 2025, 22:24 [IST]
Other articles published on Sep 4, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+