For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

10 நாடுகளில் சதம் அடித்த ஒரே இந்திய வீரர்.. சச்சினால் கூட முடியாத சாதனை.. ஹேப்பி பர்த்டே டிராவிட்

மும்பை: இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் ராகுல் டிராவிட் இன்று தனது 52 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவர் செய்த சில முறியடிக்கப்படாத சாதனைகளை இங்கே பார்க்கலாம். 10 நாடுகளில் டெஸ்ட் சதங்களை அடித்த ஒரே இந்திய வீரர் ராகுல் டிராவிட் மட்டுமே.

இந்த சாதனையை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரால் கூட முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் போட்டிகளில் சர்வதேச அளவில் அதிக பந்துகளை சந்தித்த வீரரும் ராகுல் டிராவிட் தான். அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 31,258 பந்துகளை சந்தித்து இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் அவருக்கு அடுத்த இடத்தில் தான் இருக்கிறார்.

rahul dravid sachin tendulkar

டெஸ்ட் போட்டிகளில் சச்சின் 29,437 பந்துகளை சந்தித்து இருக்கிறார். டிராவிட் 164 டெஸ்ட் போட்டிகளிலேயே 31,258 பந்துகளை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 29,437 பந்துகளை சந்தித்தார். மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜாக்கஸ் காலிஸ் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28,193 பந்துகளை சந்தித்து இருக்கிறார்.

அடுத்து டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஃபீல்டர் என்பதையும் ராகுல் டிராவிட் நிரூபித்து இருக்கிறார். அவர் மொத்தம் 210 கேட்சுகளை பிடித்து இருக்கிறார். இந்த சாதனையை விரைவில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் முறியடிக்க வாய்ப்பு உள்ளது. ஜோ ரூட் இதுவரை 207 கேச்களை பிடித்து இருக்கிறார்.

ராகுல் டிராவிட் டெஸ்ட் போட்டிகளில் 44 ஆயிரத்து 152 நிமிடங்கள் ஆடுகளத்தில் இருந்துள்ளார். இந்த சாதனையை எந்த வீரராலும் இதுவரை முறியடிக்க முடியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் 88 முறை 100 ரன்களுக்கும் அதிகமான கூட்டணிகளை அமைத்து இருக்கிறார் ராகுல் டிராவிட்.

இதன் மூலம் கூட்டணியை உருவாக்கும் மிகச் சிறந்த வீரராகவும் பெயர் பெற்றார். அதேபோல டெஸ்ட் போட்டிகளில் அதிகமுறை 300 ரன்களுக்கும் அதிகமாக கூட்டணியாக ரன் சேர்த்தவர்கள் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார். மொத்தம் ஆறு முறை 300 ரன்களுக்கும் அதிகமான கூட்டணியை அமைத்து இருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளில் அவர் அதிக முறை டக் அவுட் ஆனது இல்லை. சுமார் 120 போட்டிகள் தொடர்ந்து டக் அவுட் ஆகாமல் ராகுல் டிராவிட் சாதனை படைத்திருக்கிறார். ராகுல் டிராவிட் இந்திய அணிக்காக 164 டெஸ்ட் போட்டிகள், 344 ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

ஒரு நாள் போட்டிகளில் 10,089 ரன்கள் குவித்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்கள் சேர்த்து இருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

Story first published: Saturday, January 11, 2025, 11:22 [IST]
Other articles published on Jan 11, 2025
English summary
Rahul Dravid celebrates his 52nd Birthday in 2025; His records that still alive
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+