Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலிக்கு திடீரென தரப்பட்ட கவுரவம்.. கூப்பிட்டு கொடுத்த டிராவிட்.. பயிற்சியின் போது நெகிழ்ச்சி

இங்கிலாந்து: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ராகுல் டிராவிட் ஸ்பெஷல் மரியாதை கொடுத்தது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

அங்கு இரு அணிகளும் ஒரு டெஸ்ட், 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதவுள்ளன.

இது அநியாயத்தின் உச்சம்.. இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் நியமனம்.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு ஐபிஎல், தென்னாப்பிரிக்க தொடர் என டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்த இந்திய அணி, டெஸ்ட் போட்டிக்கு தயாராவதற்காக முன்கூட்டியே இங்கிலாந்து சென்றுள்ளது. இங்கிலாந்து களம் குறித்து அங்கு ஒவ்வொரு வீரருக்கும் ஸ்பெஷல் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கோலிக்கு கவுரவம்

கோலிக்கு கவுரவம்

இந்நிலையில் பயிற்சியின் போது தான் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஸ்பெஷல் மரியாதை செய்துள்ளார் டிராவிட். இங்கிலாந்து மண்ணில் அதிக அனுபவம் மற்றும் நல்ல ரெக்கார்ட் வைத்துள்ள வீரர் கோலி தான். எனவே அங்கு எப்படி ஆட வேண்டும். பிட்ச்-ன் தன்மை எப்படி மாறும் உள்ளிட்டவைகளை மற்ற வீரர்களுக்கு பாடமாக எடுத்தார். இந்த வகுப்பில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

டிராவிட் நம்பிக்கை

டிராவிட் நம்பிக்கை

இந்திய அணி ஜூன் 24ம் தேதி முதல் கவுண்டி அணியுடன் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் விளையாடுகிறது. இங்கிலாந்து மண் குறித்து தெரிந்துக்கொள்ள, பயிற்சி போட்டியிலேயே முழு பலத்தையும் இறக்கவுள்ளதாக ராகுல் டிராவிட் கூறியிருந்தார். அதன்படியே தான் அத்தனை வீரர்களும் ஒன்றிணைந்துள்ளனர்.

பலவீனமான இந்திய அணி

பலவீனமான இந்திய அணி

இந்திய அணியை பொறுத்தவரையில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் என பல வீரர்களின் ஃபார்ம் கவலைக்கிடமாக உள்ளது. ஜடேஜாவும் தற்போதுதான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். தற்போதைக்கு இந்திய அணியின் நம்பிக்கையாக புஜாரா மட்டுமே ஃபார்மில் இருந்து வருகிறார்.

Story first published: Wednesday, June 22, 2022, 13:07 [IST]
Other articles published on Jun 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+