
பயிற்சியாளர் குற்றச்சாட்டு
இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், கால்பந்து உள்ளிட்ட மற்ற விளையாட்டுக்கு தருவது இல்லை என்பது பலரின் குற்றச்சாட்டு. அவ்வளவு ஏன் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் இகார் ஸ்டிமாச், கால்பந்தை வளர விடாமல் இந்தியாவில் சிலர் பயப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம்
கால்பந்தை வளர்க்க மத்திய அரசு பல உதவிகள் செய்யும் என எதிர்பார்த்த தமக்கு ஏமாற்றமே மிஞ்சியதாக குறிப்பிட்ட அவர், தாம் செய்ய நினைத்த பல மாற்றங்களை இந்திய கால்பந்தில் செய்ய முடியவில்லை என்றும் கூறினார். ஐபிஎல் தொடருக்காக ஐஎஸ்எல் கால்பந்து தொடரை மாற்ற கூடாது என்றும் அவர் கேட்டு கொண்டார்.

ஜோதிடர் நியமனம்
இந்நிலையில், ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் இந்தியா தகுதி பெற்றுள்ளது. கம்போடியா, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகளை வீழ்த்தி இந்தியா தகுதி பெற்றது. இந்த நிலையில், இந்திய கால்பந்து அணிக்கு ஜோதிடர் ஒருவரை இந்திய கால்பந்து சம்மேளனம் நியமித்துள்ளது. அவருக்கு 16 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

சர்ச்சை
இந்த செய்தி வெளியானதும் கால்பந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. ஒவ்வொரு கால்பந்து அணிக்கும் தேவையான, தொழில்நுட்ப பிரிவினர், உடற்பயிற்சி நிபுணர்கள் , உத்திகளை வகுக்கும் வீடியோ நிபுணர்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப வல்லுனர்கள் ஒவ்வொரு அணிக்கும் முக்கியம். ஆனால், AIFF ஜோதிடரை நியமித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.