Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் இல்லைனா இவ்வளவு நல்லதா??.. வங்கதேச தொடரில் டிராவிட்டிற்கு நிம்மதி பெருமூச்சு.. காரணம் என்ன?

சட்டோகிராம்: வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இல்லாதது ராகுல் டிராவிட்டிற்கு நல்ல விஷயமாக அமைந்துள்ளது.

இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை சட்டோகிராமில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியை தழுவிய இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. இதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும்.

முக்கிய மாற்றங்கள்

முக்கிய மாற்றங்கள்

இப்படிப்பட்ட முக்கிய தொடரில் இந்தியா பல முக்கிய மாற்றங்களை சந்தித்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவே காயம் காரணமாக விலகியுள்ளார். இதே போல இந்தியாவின் முன்னணி பவுலர்களான முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் தொடரில் இருந்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்ல விஷயம்

நல்ல விஷயம்

இந்நிலையில் ரோகித் சர்மா இல்லாதது டிராவிட்டிற்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்திய டெஸ்ட் அணியின் முதன்மை வீரராக சுப்மன் கில் இருக்கிறார். இதே போல கே.எல்.ராகுல் இருக்கிறார். ஒருவேளை ரோகித் சர்மா இருந்திருந்தால் டாப் ஆர்டரில் இவர்கள் மூன்று பேரையுமே கொண்டு வருவது கடினமானதாக இருக்கும். 2 பேரையும் சேர்த்தால் மிடில் ஆர்டரில் விராட் கோலி, புஜாரா, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோரை அடக்க முடியாது.

புதிய திட்டம்

புதிய திட்டம்

ஆனால் தற்போது ரோகித் சர்மா இல்லாததால் ஓப்பனிங்கில் எவ்வித போட்டியும் இன்றி கே.எல்.ராகுல் - சுப்மன் கில் ஓப்பனிங் ஆடலாம். முதல் விக்கெட்டிற்கு சட்டீஸ்வர் புஜாரா மற்றும் 2வது விக்கெட்டிற்கு விராட் கோலி களமிறங்குவார்கள். 5வது வீரராக ஸ்ரேயாஸ் ஐயரும், 6வது வீரராக ரிஷப் பண்ட்-ம் இடம் பிடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீதமுள்ள 5 இடங்கள்

மீதமுள்ள 5 இடங்கள்

இவர்கள் போக, மற்ற 5 இடங்களிலும் பவுலர்களை நிரப்ப சரியாக இருக்கும். ஆனால் 5 பவுலர்களுடன் தான் இந்தியா களமிறங்க போகிறதா? அல்லது 6வதாக ஒரு பவுலிங் ஆப்ஷனுக்கு ஆல்ரவுண்டர் தேவை என்று நினைக்குமா? என இறுதி செய்யப்படவில்லை. ஒருவேளை 6வது பவுலிங் ஆப்ஷன் தேவைப்பட்டால் ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றம் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.

Story first published: Tuesday, December 13, 2022, 14:28 [IST]
Other articles published on Dec 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+