
ஓப்பனிங் பேட்டிங்
இந்திய அணியில் ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளன. ஓப்பனிங்கை பொறுத்தவரையில் ரோகித் சர்மாவுடன் கே.எல்.ராகுல் களமிறங்கவிருந்தது. ஆனால் அவரால் வரமுடியாமல் போனதை அடுத்து இஷான் கிஷான் மட்டுமே தற்போது ஒரே ஒரு தேர்வாக இருக்கிறார்.

மிடில் ஆர்டர் பேட்டிங்
மிடில் ஆர்டரில் டி20 உலகக்கோப்பை அணியின் முக்கிய தேர்வாக உள்ள சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் உள்ளனர். ஆனால் இதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் தீபக் ஹூடா ஆகியோருக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. 3வது இடத்திற்காக இவர்கள் இருவரில் இருந்து யாரேனும் ஒருவரை தான் களமிறக்கப்படுவார்கள்.

லோயர் ஆர்டர் பேட்டிங்
லோயர் ஆர்டரை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாடவுள்ளார். இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினால் தினேஷ் கார்த்திக் வெளியே உட்காரவைக்கப்படுவார். ஒருவேளை தினேஷ் கார்த்திக்கை பயன்படுத்தினால், இந்திய அணியால் 4 பவுலர்களை மட்டுமே பயன்படுத்த முடியும். ஹர்திக் பாண்ட்யாவை 5வது பவுலராக பயன்படுத்த வேண்டும்.

பந்துவீச்சு படை
வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் ஹர்ஷல் பட்டேல், மற்றும் புவனேஷ்வர் குமார் உள்ளனர். சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய், அஸ்வின், ஜடேஜா, அக்ஷர் பட்டேல் என 5 பேர் போட்டிப்போட்டு வருகின்றனர். ஜடேஜாவின் உடல்நிலை குறித்து தகவல் வெளியாகாததால் அக்ஷர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் / அஸ்வின் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ப்ளேயிங் 11 விவரம்
ரோகித் சர்மா, இஷான் கிஷா, ஸ்ரேயாஸ் ஐயர் / தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் பட்டேல், புவனேஷ்வர் குமார், அக்ஷர் பட்டேல், அஸ்வின் / குல்தீப் யாதவ்


Click it and Unblock the Notifications











