சச்சினால் ஸ்டார் ஆனேன்: 'ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்' சோயப் அக்தர்
டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிடால் தான் பல இரவுகள் தூங்க முடியாமல் தவித்ததாக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,

டிராவிட்
நான் சச்சின் டெண்டுல்கரால் அல்ல மாறாக ராகுல் டிராவிடால் பல இரவு தூங்காமல் இருந்துள்ளேன். என்னை தனது திறமையால் மிரட்டக்கூடியவர் டிராவிட் மட்டுமே.

முகமது அலி
ராகுல் டிராவிட் முன்னாள் குத்துச்சண்டை வீரர் முகது அலி போன்று. அவர் பந்துவீச்சாளரை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சோர்வடைய வைத்துவிடுவார்.

சச்சின்
ராகுல் டிராவிடை சமாளிக்க சரியான ஆள் வாசிம் அக்ரம் தான். சச்சின் டெண்டுல்கர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவரால் தான் நான் ஸ்டார் ஆனேன். அதற்காக அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றார் அக்தர்.

அக்தர்
கிரிக்கெட் வரலாற்றில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய முதல் வீரர் அக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 12 இன்னிங்ஸ்களில் அவுட்டாகாமல் இருந்து உலக சாதனை படைத்தவர் அக்தர்.


Click it and Unblock the Notifications