Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உணவு நேரத்தில் கூட பதற்றம்.. நியூசி, உதவிக்காக காத்திருந்த இந்திய வீரர்கள்.. டிராவிட் சுவாரஸ்ய தகவல்

அகமதாபாத்: டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் சாதிப்பதற்காக இந்திய அணிக்காக நியூசிலாந்து அணி போராடியதை பெரும் பரபரப்புடன் பார்த்து வந்ததாக பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சுவாரஸ்ய தகவல்களை கொடுத்துள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த தொடரை 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

அகமதாபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுமா என்பதில் பெரும் சந்தேகம் இருந்தது. எனினும் அந்த வெற்றியை விட நியூசிலாந்து அணியின் மீது தான் ரசிகர்களின் கவனம் இருந்தது. இதற்கு காரணம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தான்.

 இந்தியாவின் வாய்ப்பு

இந்தியாவின் வாய்ப்பு

ஆஸ்திரேலியாவுடனான 4வது டெஸ்டில் வெற்றி கண்டால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலைமை இருந்தது. ஆனால் சமனில் தான் முடிக்க முடிந்தது. மறுபுறம் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ள இலங்கை அணி நியூசிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. இதில் இரண்டிலும் வெற்றி கண்டுவிட்டால், அந்த அணி இறுதி சுற்றுக்கு முன்னேறிவிடும். எனவே இலங்கையை நியூசிலாந்து வீழ்த்த வேண்டும் என இந்திய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.

த்ரில்லர் வெற்றி

த்ரில்லர் வெற்றி

அதற்கேற்றார் போலவே சமன் செய்ய வேண்டிய போட்டியை போராடி வென்று கொடுத்தது நியூசிலாந்து அணி. வெற்றி பெற கடைசி 19 ஓவர்களில் 124 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. இப்படிபட்ட சூழலில் எந்தவொரு அணியும் சமன் செய்ய தான் முயற்சிக்கும். ஏனென்றால் அதிரடியாக ஆட முயன்றால் விக்கெட்கள் சரிந்துவிடும். ஆனால் நியூசிலாந்து அணி கடைசி பந்து வரை அதிரடி காட்டி த்ரில் வெற்றி பெற்றது.

டிராவிட் விளக்கம்

டிராவிட் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். அதில், அனைத்து போட்டிகளிலும் முடிவு கிடைத்துவிட வேண்டும் என நினைத்தோம். டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை எங்களின் கைகளில் வைத்துக்கொள்ள நினைத்தோம். அகமதாபாத்தின் பிட்ச்-ஐ பார்த்த உடனேயே டாஸ் முக்கியம் என்பதை தெரிந்துக்கொண்டோம். அதுவும் முதல் 2 நாட்கள் ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை பார்த்தவுடன், நியூசிலாந்தின் உதவியை தான் நம்ப வேண்டியதாயிற்று.

கடைசி 6 ஓவர்கள்

கடைசி 6 ஓவர்கள்

ஐசிசி தொடர்களின் முக்கிய கட்டங்களில் நியூசிலாந்து எப்போதுமே இந்தியாவை வெளியேற்றும். இதனால் இலங்கை வென்றுவிட வேண்டும் என ஆவலுடன் பார்த்தோம். ஆனால் எங்களுக்காக நியூசிலாந்து அணி உதவியது. அவர்கள் நினைத்திருந்தால் சமனில் முடித்திருக்கலாம். எனினும் அவர்கள் கடைசி வரை போராடியது எங்களுக்கு பரபரப்பாக இருந்தது. உணவு நேரத்தில் கூட நியூசிலாந்தின் கடைசி 5 - 6 ஓவர்களை நாங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பார்த்தோம். நியூசிலாந்துக்கு நாங்கள் நன்றி கூற வேண்டும் என டிராவிட் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 14, 2023, 10:23 [IST]
Other articles published on Mar 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+