For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் சர்மாவை கைவிடாத ராகுல் டிராவிட்.. இங்கிலாந்தை பற்றி கவலை இல்ல.. ஸ்டோக்ஸ்க்கு தக்க பதிலடி

பிர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை முதல் நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended Video

IND vs ENG: Rohit Ruled Out ஆகல! Dravid-ன் Press Meet

புதன்கிழமை நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் ரோகித் சர்மாவுக்கு பாசிட்டிவ் என முடிவு வந்தது.

இதனையடுத்து, ரோகித் சர்மாவுக்கு பதில், பும்ரா கேப்டன் பதவியை ஏற்பார் என்ற தகவல் வெளியானது. எனினும் இதனை ராகுல் மறுத்துவிட்டார்.

இன்னும் 2 சோதனை

இன்னும் 2 சோதனை

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் டிராவிட், இன்னும் 36 மணி நேரம் இருக்கிறது. ரோகித் சர்மாவுக்கு மேலும் 2 பரிசோதனை நடைபெறும். இதில் நெகட்டிவ் என்று முடிவு வந்தால் , இந்திய அணியை ரோகித் சர்மா தான் வழிநடத்துவார். இதனால் ரோகித் சர்மா குறித்து நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்வுக்குழுவினர் தான் கேப்டன்சி குறித்து முடிவு எடுப்பார்கள்.

வாய்ப்பு உருவாகும்

வாய்ப்பு உருவாகும்

இம்முறை இந்தியா வித்தியாசமான அணுகுமுறையை கொண்ட இங்கிலாந்து அணியை பார்க்கும் என்று ஸ்டோக்ஸ் கூறியது குறித்து டிராவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டிராவிட், உண்மையை சொல்ல வேண்டும் என்றால், இங்கிலாந்து ஆடும் ஸ்டைலை பார்த்தால், எங்களுக்கு வாய்ப்பு உருவாகும் என்று தான் தோன்றுகிறது.

கவலை இல்லை

கவலை இல்லை

எனினும் 2க்கு1 என்ற கணக்கில் நாங்கள் முன்னிலையில் உள்ளோம். தொடரை கைப்பற்றுவதும், விடுவதும் எங்கள் கையில் தான் உள்ளது. எங்கள் கிரிக்கெட் மீது தான் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். இங்கிலாந்து அணி எப்படி விளையாடுகிறது என்பது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.நாங்கள் நேர்மறையான எண்ணங்களுடன் விளையாடுகிறோம்.

20 விக்கெட்

20 விக்கெட்

டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கடந்த முறை 2வது இடத்தை பிடித்தோம். இம்முறை 3வது இடத்தில் இருக்கிறோம். என்னை பொறுத்தவரை 20 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டும். ரோகித் இல்லை என்றால் தொடக்க வீரர் யார் என்று கேள்வி கேட்டதற்கு, இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

Story first published: Thursday, June 30, 2022, 21:39 [IST]
Other articles published on Jun 30, 2022
English summary
Rahul dravid press conference on rohit sharma availability ரோகித் சர்மாவை கைவிடாத ராகுல் டிராவிட்.. இங்கிலாந்தை பற்றி கவலை இல்ல.. ஸ்டோக்ஸ்க்கு தக்க பதிலடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+