Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ இதுதான் காரணமா? ஆஸி,வீரர்களுக்கு டிராவிட் விரித்த வலை.. உளறிய பிட்ச் அதிகாரி.. தப்பிக்கவே முடியாது

இந்திய பிட்ச்-ஐ கடைசி நேரத்தில் ராகுல் டிராவிட் மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சூழலில் அதற்கு பின்னால் அவர் வைத்துள்ள மாஸ்டர் ப்ளான் தெரியவந்துள்ளது. இதனை பிட்ச் வடிவமைப்பாளரே கூறியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் திருவிழா இன்று முதல் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கவுள்ளது.

பார்டர் கவாஸ்கர் கோப்பை என்றால் பல்வேறு விவாதங்கள் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை 10 நாட்களுக்கு முன்பு இருந்தே இந்திய பிட்ச்-கள் மீது ஆஸ்திரேலிய வீரர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

பிட்ச் சர்ச்சை

பிட்ச் சர்ச்சை

நாக்பூர் மைதானத்தில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிட்ச் தயாரிக்கப்பட்டுவிட்டது. ஆனால் திடீரென அங்கு விசிட் அடித்து பார்த்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் அதிருப்தியடைந்துள்ளார். மேலும் பிட்ச்-ல் உடனடியாக மாற்றங்களை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார். இதனால் அவசர அவசரமாக பிட்ச்-ல் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் அதிகப்படியான தண்ணீரை விட்டு மாற்றினர். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

டிராவிட்டின் ப்ளான்

டிராவிட்டின் ப்ளான்

இந்நிலையில் இதற்கு பின்னால் உள்ள காரணம் தெரியவந்துள்ளது. அதாவது, தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களால் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும். பிட்ச்-ல் அதிக சுழல் உள்ள போதும் ஓரளவிற்கு வலதுகை வீரர்கள் சமாளிக்கலாம். ஆனால் இடதுகை பேட்டர்கள் கிறீஸில் இருக்கும் போது அவர்களுக்கான பவுலிங் லைன் மட்டும் அதிகம் வறண்டுள்ளது. இதனால் நினைத்து பார்க்காத அளவிற்கு ஸ்பின் ஆகும். நிலைத்து நிற்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டாவார்கள்.

காரணம் என்ன

காரணம் என்ன

இதுபோன்ற வித்தியாசமான முடிவை டிராவிட் எடுத்ததற்கு ஆஸ்திரேலியாவின் ப்ளேயிங் 11 தான் காரணம். அந்த அணியில் உள்ள டாப் 8 பேட்டர்களில் 6 பேர் இடதுகை வீரர்கள் ஆகும். கிட்டத்தட்ட டாப் ஆர்டர் முழுவதும் இடதுகை வீரர்களாக உள்ளனர். ஆனால் இந்திய அணியை எடுத்துக்கொண்டால் ரவீந்திர ஜடேஜா மட்டும் தான் இடதுகை பேட்டர். இதற்காக தான் ஸ்பெஷல் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 5 நாட்கள் நடக்குமா?

5 நாட்கள் நடக்குமா?

இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் முழுமையாக 5 நாட்கள் நடைபெறுவது இல்லை என்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன. நாக்பூர் பிட்ச்-கள் இயற்கையாகவே சற்று வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் உதவும் என்பதால் 5 நாட்களும் நடைபெறும் வகையில் தான் இருந்தது. ஆனால் டிராவிட் செய்த மாற்றத்திற்கு பின்னர் போட்டி 3 - 4 நாட்களுக்குள் முடிவடைவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, February 9, 2023, 8:51 [IST]
Other articles published on Feb 9, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+