Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

23 பவுண்டரி அடித்து 100 பந்தில் 151 ரன்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய ராகுல் டிராவிட் மகன் அன்வே!

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட், உள்ளூர் கிரிக்கெட்டில் தனது அதிரடியால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். வினூ மான்கட் டிராபி எலைட் தொடரில் கர்நாடக அணியின் கேப்டனாக விளையாடி வரும் 17 வயதான அன்வே, குஜராத் அணிக்கு எதிராக அனல் பறக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 100 பந்துகளில் 23 பவுண்டரிகளை விளாசி 151 ரன்கள் குவித்து, தனது அணிக்கு அசாத்திய வெற்றியைத் தேடித்தந்துள்ளார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 357 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது. சமீர் பண்டாரி மற்றும் யாஷ் பஞ்வானி ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 217 ரன்கள் சேர்த்து ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து 358 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி கர்நாடக அணி சேஸிங்கில் களமிறங்கியது. தொடக்க வீரர்கள் விரைவாக வெளியேறிய நிலையில், கேப்டன் அன்வே டிராவிட் குஜராத்தின் பந்துவீச்சை நாலாபுறமும் துவம்சம் செய்தார். துருவ் கிருஷ்ணனுடன் இணைந்த இவர், 3-வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் குவித்து வெற்றியை எளிதாக்கினார்.

Rahul Dravid Son Anvay Dravid Smashes 151 Runs off 100 Balls with 23 Fours in Domestic Cricket

துருவ் கிருஷ்ணன் ஆட்டமிழந்த பின்னரும் அதிரடியைத் தொடர்ந்த அன்வே, அனிகேத் ரெட்டியுடன் இணைந்து 4-வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தார். அன்வே 44-வது ஓவரில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், இறுதியில் கர்நாடகா 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக டெல்லிக்கு எதிரான போட்டியிலும் கூட, அன்வே டிராவிட் வெறும் 41 பந்துகளில் 85 ரன்கள் விளாசி கர்நாடக அணி 418 ரன்களைக் குவிக்க முக்கியக் காரணமாக இருந்தார்.

IND vs WI 5வது டி20 போட்டிக்கு மழையால் எந்த அளவு பாதிப்பு? வானிலை அறிக்கை சொல்வது இதுதான்!

IND vs WI 5வது டி20 போட்டிக்கு மழையால் எந்த அளவு பாதிப்பு? வானிலை அறிக்கை சொல்வது இதுதான்!

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் அன்வே அறிமுகமானார். இவரது அபார ஃபார்ம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் நவம்பரில் நடைபெற உள்ள 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை அணியில் அன்வே தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. அதேபோல் வெள்ளிக்கிழமை சதமடித்து மிரட்டிய முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக்கும் இந்த இந்திய அணித் தேர்வில் பலத்த போட்டியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, October 16, 2026, 18:09 [IST]
Other articles published on Oct 16, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+