Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திரிபாதி அதிரடி.. கொல்கத்தாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை ருசித்தது புனே

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புனே அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில், கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற புனே அணி கேப்டன் ஸ்மித் பீல்டிங் தேர்வு செய்தார்.

Rahul Tripathi's 52-ball 93 fires Pune to 4-wicket win against Kolkata

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியின் ஓபனிங் பேட்ஸ் மேன் நரேன் முதல் ஓவரின் 6 பந்துகளை சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் 'டக் அவுட்' ஆகி வெளியேறினார். பின்னர் தட்டுதடுமாறிய கம்பீர் 24 ரன்களில் நடையைக் கட்டினார். கம்பீரை தொடர்ந்து 3-வது வீரராக களமிறங்கிய ஜாக்சன்(10) அடுத்து வந்த யூசப் பதான்(4) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இருப்பினும், மணிஷ் பாண்டே 32 பந்தில் 37 ரன்களும், டி கிரண்ட் ஹோம் 19 பந்தில் 36 ரன்களும், சூர்ய யாதவ் 16 பந்தில் 30 ரன்களும் எடுத்து (16) சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது.

புனே அணி தரப்பில் உனகண்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்பின்னர் 156 என்ற எளிய இலக்கை விரட்டிய புனே அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திரிபாதி 52 பந்துகளில் 93 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். டோணி உள்பட மற்ற வீர்ர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாகினர்.

இதன் மூலம் புனே அணி தற்போது ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது. பெங்களூருக்கு எதிரான போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்திலும், குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், இந்தப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி கண்டு 'ஹாட்ரிக் வெற்றி' பெற்றுள்ளது புனே.

Story first published: Thursday, May 4, 2017, 1:30 [IST]
Other articles published on May 4, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+