Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புள்ளி பகிரப்பட்டதால் சிஎஸ்கேக்கு ஆபத்து.. பிளே ஆப் சுற்றுக்கு வந்த சிக்கல்.. எப்படி தெரியுமா?

லக்னோ : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே, லக்னோ அணிகள் மோதிய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது. இது, புள்ளி பட்டியலில் பல்வேறு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இன்னும் 4 பந்துகள் தான் எஞ்சி இருந்தது. இதனால், இந்த இலக்கை சிஎஸ்கே அணி எளிதாக தொட்டு, 2 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்திருக்கும்.

தற்போது சிஎஸ்க அணிக்கு ஒரு புள்ளிகள் தான் கிடைத்துள்ளது. இதன் மூலம் 11 புள்ளிகள் பெற்று சிஎஸ்கே அணி 3வது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது. ஆனால் சிஎஸ்கே 10 போட்டிகளில் விளையாடி விட்டது. இதனால் எஞ்சிய 4 போட்டிகள் தான் சிஎஸ்கேக்கு உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் , 16 முதல் 18 புள்ளிகள் தேவைப்படும்.

Rain made a things worse for CSK Playoff qualification scenario

அதுவும் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணிக்கு முதல் குவாலிபையரில் தோற்றால், இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும். இதனால் சிஎஸ்கே அணி 18 புள்ளிகளை பெற்று அதிக ரன் ரேட்டை பெற வேண்டும். தற்போது சிஎஸ்கே அணி 18 புள்ளிகளை தாண்ட வேண்டும் என்றால் எஞ்சிய 4 போட்டிகளையும் வெல்ல வேண்டும்.

இதில் சிஎஸ்கே அணி சொந்த மண்ணில் மும்பை, டெல்லி, மற்றும் கொல்கத்தாவை எதிர்கொள்ள உள்ளது. இதே போன்று சென்னை அணி கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லிக்கு சென்று டெல்லி கேபிட்டல்ஸை எதிர்கொள்ள உள்ளது. இதில் சிஎஸ்கே அணி 3 போட்டிகளில் வெல்கிறது என்று வைத்து கொள்வோம். சிஎஸ்கே அணியால் 17 புள்ளிகள் தான் பெற முடியும்.

அதுவே 2 போட்டிகளில் தான் வெல்கிறது என்றால், 15 புள்ளிகள் தான் சிஎஸ்கே வால் பெற முடியும். இதனால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது கூட பிரச்சினையை தரும். ஒரு வேலை சிஎஸ்கே கீழே உள்ள அணிகள் எல்லாம் தோல்வியை தழுவினால், அப்போது தான் சிஎஸ்கேவின் பிளே ஆப் வாய்ப்பு அதிகரிக்கும். இதனால் எஞ்சிய 4 போடடிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

Story first published: Wednesday, May 3, 2023, 20:16 [IST]
Other articles published on May 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+