
2வது ஒருநாள்
இதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர். டெஸ்ட் தொடரில் விளையாடிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படாமல் ஒரு நாள் தொடரிலும் தேர்வு குழுவினர் தேர்வு செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை இந்தியா பதிவு செய்தது.
இதன் மூலம் தொடரை தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை ஞாயிற்றுக்கிழமை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

கனமழை
இதற்காக இரு அணி வீரர்களும் இன்று விசாகப்பட்டினம் செல்கின்றனர். விசாகப்பட்டினம் எப்போதுமே இந்தியாவுக்கு சாதகமான மைதானமாக விளங்கி இருக்கிறது. மேலும் ரன் குவிப்புக்கு ஏற்ற வகையில் ஆடுகளம் இருக்கும் என்பதால் நாளை ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தற்போது பெரிய ட்விஸ்ட் ஒன்றை வருண பகவான் நடத்தி இருக்கிறார். கோடை காலமான மார்ச் மாதத்தில் யாருமே எதிர்பாராத வகையில் ஆந்திரா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.

தண்ணீர் வெளியேறும் வசதி
குறிப்பாக விசாகப்பட்டினத்தில் இன்றும் நாளையும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விசாகப்பட்டினம் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மைதானத்தில் தண்ணீர் வெளியேற்றுவதற்கு சிறந்த வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இதன மழை நின்று ஒரு மணி நேரத்திலேயே போட்டி தொடங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம்.

பாதிக்க வாய்ப்பு
ஆடுகளத்தை மட்டும் மூடாமல் ஒட்டுமொத்த மைதானத்தையும் தார் பாயால் மூடி இருக்கிறோம். இதனால் மழையால் மைதானம் பாதிக்கப்பட வாய்ப்பு இல்லை. எனினும் மழை நின்றால் மட்டுமே எங்களால் போட்டியை தொடங்க முடியும் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் நாளைய ஒரு நாள் போட்டி பெரும்பாலும் 50 ஒவர் போட்டியாக நடைபெறாது என கருதப்படுகிறது சென்னையிலும் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி புதன்கிழமை நடைபெற இருக்கிறது.


Click it and Unblock the Notifications