
ஆடுகளம்
எப்போதும் இந்தியாவில் பிட்ச் மட்டும் தான் தார் பாயால் முடப்படும். ஆனால் விசாகப்பட்டினத்தில் மைதானம் முழுவதும் தார் பாயால் மூடப்பட்டு இருந்தது. மேலும் தண்ணீர் வெளியேறும் வசதி இந்த மைதானத்தில் செய்யப்பட்டுள்ளதால், மழை நின்று 1 மணி நேரத்தில் எல்லாம் போட்டி நடைபெற ஆடுகளம் தயாராகிவிடும்.

மழை
இந்த நிலையில், காலை 10 மணி முதல் மழை விசாகப்பட்டினத்தில் நின்றுவிட்டது. மேலும் மழை மேகங்களும் விசாகப்பட்டினத்தை விட்டு விலகி சென்றது ரேடார் கருவி மூலம் உறுதியாகி உள்ளது. இதனால் போட்டி தொடங்குவதற்குள் மைதானத்தை சரி செய்து, திட்டமிட்டப்படி முழு 50 ஓவர்களும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரும்பிய ரோகித்
இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, 2வது ஒருநாள் போட்டிக்கு திரும்பியுள்ளார். இதன் காரணமாக தொடக்க வீரர் இஷான் கிஷன் அணியிலிருந்து நீக்கப்பட உள்ளார். இதை தவிர வேறு எந்த மாற்றமும் அணியில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை வார்னர் தன்னுடைய இடத்திற்கு திரும்ப வாய்ப்புள்ளது.

பிளேயிங் லெவன்
1, ரோகித் சர்மா, 2, சுப்மன் கில், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, கேஎல் ராகுல், 6, ஹர்திக் பாண்டியா, 7, ஜடேஜா, 8, முகமது ஷமி, 9, முகமது சிராஜ், 10, ஷர்துல் தாக்கூர், 11, குல்தீப் யாதவ்


Click it and Unblock the Notifications