திரும்ப போகிறேன்.. வெளிப்படையாக அறிவித்துவிட்டார்.. சிஎஸ்கேவில் இனி என்ன நடக்கும் என்றே தெரியலையே!
டெல்லி: கடந்த ஐபிஎல் தொடரில் ஆடாமல் வெளியேறிய ரெய்னா, வரும் ஐபிஎல் தொடரில் ஆடுவார் என்பது உறுதியாகி உள்ளது.
2020 ஐபிஎல் தொடர் நடந்து முடிந்து சில வாரங்களே ஆகியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரில் வென்று கோப்பையை தக்க வைத்தது.
இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் முக்கியமான வீரர் ரெய்னா இடம்பெறவில்லை. அவர் ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென்று வெளியேறினார் .

என்ன காரணம்
ரெய்னாவின் வெளியேற்றத்திற்கு நிறைய காரணங்கள் சொல்லப்பட்டது. சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் மோதல் காரணமாக ரெய்னா தொடரில் இருந்து வெளியேறினார் என்று கூறினார்கள். தனக்கு சரியான ஹோட்டல் அறை கொடுக்கவில்லை, அணியில் தனக்கு மரியாதை இல்லை என்று இவர் சண்டை போட்டதாக தகவல் வந்தது. இது தொடர்பாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் நிறைய வந்தது.

உறுதி இல்லை
இன்னொரு பக்கம் கொள்ளையர்கள் மூலம் ரெய்னாவின் உறவினர்கள் கொல்லப்பட்டது முக்கியமான காரணமாக கூறப்பட்டது. இதனால்தான் அவர் இந்திய திரும்பினார். ஐபிஎல் போட்டிகளில் ஆடாமல் பாதியில் வெளியேறினார் என்றும் கூறப்பட்டது.

இப்போது நிலைமை
இந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் ரெய்னா எப்போதும் போல ஆட போகிறார் என்பது உறுதியாகி உள்ளது. 2021 ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வேன் என்று ரெய்னா உறுதி அளித்துள்ளார். இதற்காக ரெய்னா சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் ஆட உள்ளார்.

உத்தர பிரதேசம்
உத்தர பிரதேச அணியில் அவர் இணைய போகிறார். அந்த அணியில் இருந்து சையது முஷ்டாக் கோப்பை போட்டியில் ஆடுவார். அதன்பின் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்வார். இவர் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணியில் தொடர்வாரா என்பது சந்தேகம்தான்.

சிஎஸ்கே
சிஎஸ்கே அணியில் கோர் அணியை மொத்தமாக மாற்ற போவதாக தோனி தெரிவித்துள்ளார். இந்த நிலையில்தான் ரெய்னா மீண்டும் அணிக்கு வருவதாக கூறியுள்ளார். இவர் மீண்டும் வந்தால் தோனி அவரை ஏற்றுக்கொள்வாரா, சிஎஸ்கேவில் என்ன நடக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications