For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

புனே கேப்டன் டோணி.. ஓகே.. அப்ப ராஜ்கோட்டுக்கு யாரு?

டெல்லி: ஐபிஎல் புனே அணியின் கேப்டனாக எம்.எஸ்.டோணி செயல்படவுள்ளார். அதேசமயம், ஐபிஎல் ராஜ்கோட் அணியின் கேப்டன் யார் என்பதில் கொஞ்சம் போட்டி நிலவுகிறது.

சுரேஷ் ரெய்னா அல்லது பிரன்டன் மெக்கல்லம் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக்கப்படலாம் என்று தெரிகிறது. மெக்கல்லத்தை விட ரெய்னாவுக்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.

தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸைச் சேர்ந்த வீரர்களைத்தான் அதிக அளவில் முதல் கட்ட ஏலத்தில் எடுத்துள்ளது ராஜ்கோட் அணி என்பதால் அந்த அணியைச் சேர்ந்தவரே கேப்டனாகும் வாய்ப்புகளும் அதிகம்.

டோணிக்குச் சமமாக உயர்ந்த ரெய்னா

டோணிக்குச் சமமாக உயர்ந்த ரெய்னா

டோணியைப் போலவே ரூ. 12.5 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டுள்ளார் ரெய்னா. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப் பெரிய பங்களிப்பைக் கொடுத்தவர் இவர். மேலும் ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான வீரரும் இவர்தான்.

கேப்டனாகும் வாய்ப்பு அதிகம்

கேப்டனாகும் வாய்ப்பு அதிகம்

தற்போதைய நிலையில் ராஜ்கோட் அணியின் கேப்டனாகும் வாய்ப்புகள் ரெய்னாவுக்கே அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது.

மகிழ்ச்சி மகிழ்ச்சி

மகிழ்ச்சி மகிழ்ச்சி

ராஜ்கோட் அணிக்குத் தேர்வாகியுள்ளது குறித்து ரெய்னா விடுத்துள்ள டிவிட்டில், ராஜ்கோட் அணிக்காக தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. மிகவும் அழகான நகரம் ராஜோக்ட். குஜராத் மக்களின் அன்பையும், ஆதரவையும் பெற ஆர்வமாக உள்ளேன் என்று கூறியுள்ளார்.

"லோக்கல்" ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை

உள்ளூர்க்காரான ரவீந்திர ஜடேஜாவும் ராஜ்கோட் அணிக்கு வந்துள்ளார் என்ற போதிலும், அவருக்கு கேப்டனாகும் வாய்ப்புகள் குறைவு என்றே தெரிகிறது.

மெக்கல்லம் இருக்கிறார்

மெக்கல்லம் இருக்கிறார்

இன்னொரு சாய்ஸ் பிரன்டன் மெக்கல்லம். இவர் 2வது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடியவர். பின்னர் சென்னைக்கு வந்தார். டோணி தலைமையில் அட்டகாசமாக ஆடியவர். சர்வதேச அளவில் சிறந்த கேப்டன்களில் ஒருவர்.

இந்திய முகம்

இந்திய முகம்

இருப்பினும் ராஜ்கோட் அணி உரிமையாளர்கள் இந்தியர் ஒருவரையே கேப்டனாக்க முடிவெடுப்பார்கள் என்று கருதப்படுவதால் ரெய்னாவுக்கே வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.

Story first published: Tuesday, December 15, 2015, 17:16 [IST]
Other articles published on Dec 15, 2015
English summary
After being the first pick of the Intex owned Rajkot team, India's limited overs specialist Suresh Raina in all likelihood will be the favourite to lead the new IPL franchise. Raina has been bought through the draft system by Rajkot franchise for a hefty Rs 12.5 crore and he looks like the man for the top job.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X