Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னை சூப்பர் கிங்சுக்கு விசில் போடு... இணையத்தில் வைரலாகும் ரெய்னா பாடல்

மும்பை: ஐபிஎல் போட்டியை முன்னிட்டு, சென்னை அணியின் சுரேஷ் ரெய்னாவின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

ஐபிஎல் 2019 தொடர் துவங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் தனது 10வது சீசனில் களமிறங்குகிறது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரெய்னாவின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்சுக்கு விசில்போடு என்ற பாடலை பாடும் விதமாக அந்த வீடியோ உள்ளது.

சின்ன தல ரெய்னா

சின்ன தல ரெய்னா

32 வயதான ரெய்னாவுக்கு அடையாளம் தந்தது சென்னை அணி என்று கூறலாம். சென்னை ரசிகர்கள் தோனியை தல என்று அழைப்பது போல, ரெய்னாவை சின்ன தல என்றும் அழைக்கின்றனர்.

விசில் போடு பாட்டு

'சின்ன தல' என்ற வார்த்தையும், 'பொறுத்தது போதும்' இனி ஆட்டம் தான் என விசில் போடு பாடல் பாடியுள்ளார் ரெய்னா. இந்த பாடல் இணையத்தில் வேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

மோசமான பார்ம்

மோசமான பார்ம்

அண்மையில் சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. அதில் ஆடிய ரெய்னா 5 போட்டிகளில் மொத்தமாக எடுத்ததே 26 ரன்கள். ஒரே ஒரு போட்டியில் மட்டும் 54 ரன்களை குவித்தார்.

பெயர் இடம்பெறவில்லை

பெயர் இடம்பெறவில்லை

மோசமான பார்ம் காரணமாக, 2019ம் உலகக் கோப்பைக்கான பரிந்துரை அணியில் கூட ரெய்னாவின் பெயர் இடம்பெறவில்லை. எனினும் சிஎஸ்கே அணியானது ரெய்னாவை பெரிதும் நம்பியுள்ளது எனலாம்.

Story first published: Wednesday, March 13, 2019, 10:29 [IST]
Other articles published on Mar 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+