அடி பணிந்த மும்பை.. 3 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி!
Recommended Video

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தற்போது நடக்கிறது. முதலில் பேட்டிங் முடிவு செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் இப்போது மிகவும் பரபரப்பாக சென்று கொண்டுள்ளது. புள்ளி பட்டியலில் சென்னை 4 வெற்றிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 6வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணிக்கும் 7வது இடத்தில் இருக்கும் மும்பை அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்தது.

மும்பை அணி மிகவும் வலிமையான அணியாக இருக்கிறது. ஆனாலும் தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ளது. ஒரே ஒரு வெற்றிதான் அந்த அணி பெற்றுள்ளது. அதேபோல் ராஜஸ்தான் அணியும் ரஹானே தலைமையில் சொதப்பி வருகிறது.
இந்த போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடந்தது. இரண்டு அணிகளிலும் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. மும்பை அணியில் பழைய வீரர்களே அணியில் இடம்பெற்றுள்ளனர். ராஜஸ்தானில் ஸ்டூவர்ட் பின்னி நீக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டியில் மும்பை அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.முதலில் பேட்டிங் முடிவு செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்தது. அதன்பின் ஆடிய ராஜஸ்தான் எளிதாக சஞ்சு சாம்சன் அதிரடியால் வென்றது. 20 ஓவரில் இலக்கை அடைந்து ராஜஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications