Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

திங்கட்கிழமை அறுவைசிகிச்சை... 12 வாரத்துக்கு விளையாட முடியாதாம்... ஆல்-ரவுண்டருக்கு வந்த சோதனை!

லண்டன் : ஐபிஎல் 2021 தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சிற்கு கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது இடது ஆள்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது.

விரலில் பிராக்சர் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டு அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.

இதையொட்டி அவர் நாளை பிரிட்டனுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஸ்டோக்சிற்கு காயம்

ஸ்டோக்சிற்கு காயம்

ஐபிஎல் 2021 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இந்த சீசனில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது அவருக்கு இடது ஆட்காட்டி விரலில் காயம் ஏற்பட்டது.

விரலில் காயம்

விரலில் காயம்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயிலின் கேட்ச்சை பிடிக்க முற்பட்டபோது அவருக்கு இந்த காயம் ஏற்பட்டது. அவர் சமாளித்துக் கொண்டு தொடர்ந்து பேட்டிங் செய்தார். ஆயினும் அந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

விரலில் பிராக்சர்

விரலில் பிராக்சர்

இதையடுத்து ஸ்டோக்சிற்கு மேற்கொண்ட ஸ்கேன் ரிப்போர்ட்டில் அவருக்கு அந்த விரலில் பிராக்சர் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் ஐபிஎல்லில் இருந்து விலகியுள்ளார். தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை அறுவை சிகிச்சை

திங்கட்கிழமை அறுவை சிகிச்சை

தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேம்பசில் அவர் உள்ள நிலையில் நாளை பிரிட்டனுக்கு தனது பயணத்தை ஸ்டோக்ஸ் மேற்கொள்ளவுள்ளார். வரும் திங்கட்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

போட்டிகளில் விளையாட முடியாது

போட்டிகளில் விளையாட முடியாது

மேலும் அறுவை சிகிச்சையை அடுத்து அவர் 12 வாரங்களுக்கு போட்டிகளில் விளையாட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக மோதிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.

Story first published: Friday, April 16, 2021, 21:45 [IST]
Other articles published on Apr 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+