Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

”சொதப்பல்” இந்திய அணியில் எடுக்காததற்கு இதுதான் காரணமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சஞ்சு சாம்சன்!

கவுகாத்தி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார்.

16வது சீசனுக்கு 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜெய்ஸ்வால் - பட்லர் கூட்டணி தொடக்கம் முதலே அதிரடியாக ஆடியது. இதனால் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அவர் 31 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Rajasthan Royals Captain Sanju Samson gone for duck against Delhi in IPL 2023

இதனால் டெல்லி அணி 9 ஓவர்கள் முடிவில் 98 ரன்கள் குவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். கடந்த இரு போட்டிகளில் சஞ்சு சாம்சன் சிறப்பாக ஆடி இருந்ததால், இந்தப் போட்டியில் பெரிய ஸ்கோரை எட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் சஞ்சு சாம்சன் மீதான இன்கன்சிஸ்டன்சி விமர்சனங்கள் மீண்டும் எழுந்துள்ளது.

இந்த இன்கன்சிஸ்டன்சி பிரச்சனை காரணமாக தான் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 55 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன், பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 42 ரன்கள் சேர்த்து அசத்தி இருந்தார்.

Story first published: Saturday, April 8, 2023, 17:11 [IST]
Other articles published on Apr 8, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+