அகமதாபாத்: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
16வது ஐபிஎல் தொடரில் இன்றைய நாளில் 2வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. கடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இந்த இரு அணிகளும் மோதின. அதில் குஜராத் அணி வெற்றிபெற்ற நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி களமிறங்க உள்ளது. இதனால் இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு பயன்படுத்தப்பட்ட பிட்ச் தான் இன்றையப் போட்டியிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இதனால் ஹை ஸ்கோரிங் ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள போட்டியில் ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்றுள்ளார். டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ராஜஸ்தான் அணி சார்பாக ஜேசன் ஹோல்டருக்கு பதிலாக போல்ட் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதேபோல் குஜராத் அணி சார்பாக விஜய் சங்கர் நீக்கப்பட்டு அபினவ் மனோகர் சேர்க்கப்பட்டுள்ளார். டாஸ் குறித்து குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசுக்ஜையில், டாஸ் தோற்பது என்னை பொருத்தவரை சிறந்ததாகும். ஏனென்றால் முதலில் பேட்டிங் செய்வது பற்றியோ, பவுலிங் செய்வது பற்றியோ கவலையே இல்லை. இம்பேக்ட் பிளேயர் விதியை தேவைப்பட்டால் மட்டுமே பயன்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
குஜராத் அணி விவரம்: விருத்திமான் சாஹா, சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா, அபினவ் மனோகர், டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா
ராஜஸ்தான் அணி விவரம்: ஜாஸ் பட்லர், ஜெய்ஸ்வல், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ஹெட்மயர், துருவ் ஜுரல், ரவிச்சந்திரன் அஸ்வின், போல்ட், ஆடம் ஜாம்பா, சந்தீப் சர்மா, சாஹல், போல்ட்