For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2021:இந்த முறையாவது ராஜஸ்தானுக்கு ராசி இருக்குமா.. பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறுமா?

துபாய்: இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணியின் ப்ளே ஆப் கனவு எட்டாக் கனியாகும் அபாயம் உள்ளது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. இருப்பினும் கொரோனா காரணமாக மே மாதம் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து சுமார் 3 மாத இடைவெளியில் இப்போது ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின.

தடுமாறிய ராஜஸ்தான்

தடுமாறிய ராஜஸ்தான்

இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது. இன்றைய போட்டியில் தொடக்கம் முதலே ராஜஸ்தான் அணி அதிரடியாக ஆடியது. இதனால் பவர் ப்ளே முழுவதும் அனைத்து ஓவர்களிலும் சிக்சர்கள் பவுண்டரிகள் எனப் பறந்தது. குறிப்பாக, தொடக்க வீரர் எவின் லூயிஸ் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். பவர் பிளேவுக்கு பிறகு ராஜஸ்தான் அணி தடுமாறத் தொடங்கியது. அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட் இழந்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 149 ரன்களை எடுத்தது.

பெங்களூரு வெற்றி

பெங்களூரு வெற்றி

அதன் பிறகு களமிறங்கிய பெங்களூரு அணிக்கு சூப்பரான தொடக்கம் கிடைத்தது. 6ஆவது சிறப்பாக விளையாடி வந்த தேவ்தத் படிக்கல் (22 ரன்கள்) முஸ்தபிசுர் ரஹ்மான் பந்தில் போல்ட் ஆனார். சீராக ஆடி வந்த கேப்டன் விராட் கோலி, 25 ரன்களில் அட்டகாசமான த்ரோவில் ரன் அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து ஸ்ரீகர் பரத் 16ஆவது ஓவரில் 44 ரன்களில் வெளியேறினார். அதிரடியாக விளையாடி மெக்ஸ்வெல் 30 பந்துகளில் அரைசதம் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 153 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

பெங்களூரு நிலை

பெங்களூரு நிலை

இதன் மூலம் 7 வெற்றிகளுடன் பெங்களூரு அணி 14 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. பெங்களூரு அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ளன. இதில் எதாவது ஒரு போட்டியில் பெங்களூரு அணி வென்றால் கூட ப்ளே ஆப்-இல் அந்த அணியின் இடம் உறுதியாகும். பெங்களூரு அணியின் நெட் ரன்ரேட் -0.2 சற்று மோசமாக இருந்தாலும் கூட புள்ளிப் பட்டியலில் சிறப்பாக உள்ளதால் அந்த அணி எளிதில் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

ராஜஸ்தான் நிலை

ராஜஸ்தான் நிலை

மறுபுறம் ராஜஸ்தான் அணி இப்போது இக்கட்டான நிலையில் உள்ளது. 11 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி, 4 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. 7 போட்டிகளில் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியுள்ளது. அந்த அணியின் நெட் ரன் ரேடும் -0.468 என்று மிக மோசமாக உள்ளது. ராஜஸ்தான் அணி அடுத்து வரும் மூன்று போட்டிகளில் மிகப் பெரியளவில் வென்றால் மட்டுமே அடுத்துச் சுற்று குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியும். இது மட்டுமின்றி பிற ஆட்டத்தின் முடிவுகளும் ராஜஸ்தான் அணிக்குச் சாதகமாக அமைய வேண்டும். அப்போது தான் ப்ளே ஆப் சுற்றுக்கு ராஜஸ்தான் அணியால் செல்ல முடியும்.

Story first published: Thursday, September 30, 2021, 8:01 [IST]
Other articles published on Sep 30, 2021
English summary
rajasthan royals's playoff dream gets slimmer after loss against RCBWIll Rajasthan qualify for playoff. IPL t20 latest news.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+