For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி நேர "ட்விஸ்ட்".. இதுதான் ஐபிஎல்-லின் சுவாரஸ்யம் - "5 ஓவரில்" மேட்சை மாற்றிய சஞ்சு சாம்சன்

துபாய்: சன் ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (செப்.27) நடைபெற்று வரும் ஆட்டத்தில், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.

 தடுமாறிய ராஜஸ்தான்

தடுமாறிய ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர்களாக எவின் லெவிஸ், யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதில், லெவிஸ் வெறும் 6 ரன்களில் 6 ரன்களில் கேட்ச்சாகி வெளியேறினார். இதன் பிறகு நம்பிக்கை அளித்த இளம் வீரர் ஜெய்ஸ்வால், 23 பந்துகளில் 36 ரன்கள் விளாசி அவுட்டானார். இதில் 5 பவுண்டரிகளும், 1 சிக்ஸரும் அடங்கும். மறுபக்கம் ஒன் டவுன் வீரராக களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் மிக நிதானமாக விளையாடினார். ஏனெனில், இந்த போட்டியின் வெற்றி அவர்களுக்கு மிக மிக முக்கியமானது. அதேசமயம், ஹைதராபாத் ஏற்கனவே லீக்கில் இருந்து வெளியேறிவிட்டதால், எந்தவித கவலையும் இன்று ஃப்ரீயாக விளையாடினார்கள்.

 வைலண்ட் சாம்சன்

வைலண்ட் சாம்சன்

பிறகு லிவிங்ஸ்டோன் 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தாலும், நங்கூரம் பாய்ச்சி விளையாடிய சாம்சன், 15 ஓவர்களுக்கு பிறகு தனது கியரை மாற்ற ஆரம்பித்தார். அதன்பிறகு, சாம்சன் 41 பந்துகளில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். மறுபக்கம் லோம்ரோர் சிறப்பாக கம்பெனி கொடுத்தார். சித்தார்த் கவுல் வீசிய 16வது ஓவரில், 20 ரன்களை விளாசினார் சாம்சன். ஹைதராபாத் அணியின் எந்த பவுலர்களாலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை. முடிவில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில், 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. சாம்சன் 57 பந்துகளில் 82 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களில் 77 ரன்கள் எடுத்த ராஜஸ்தான், கடைசி 10 ஓவர்களில் ஓரளவு டீசண்ட்டாக விளையாடி164 ரன்கள் எடுத்தது.

 வெற்றி அவசியம்

வெற்றி அவசியம்

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை, 9 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன், 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி, இவர்களுக்கு கீழே உள்ளது. அதேசமயம், தொடரைவிட்டு ஏற்கனவே வெளியேறிவிட்ட சன் ரைசர்ஸ் ஹைதராபாத், புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஸோ, இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கண்டிப்பாக வெற்றியை பதிவு செய்தாக வேண்டும். அப்போது தான் அவர்கள் பிளே ஆஃப் ரேஸில் நீடிக்க முடியும்.

 இன்று வேகம்

இன்று வேகம்

ராஜஸ்தான் தனது கடைசிப் போட்டியில், டெல்லி அணி நிர்ணயித்த 155 ரன்கள் இலக்கை சேஸ் செய்ய முடியாமல், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில், கேப்டன் சாம்சன் 70 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் இருந்தும், ராஜஸ்தான் அணியால் வெற்றிப் பெற முடியவில்லை. இந்நிலையில், இன்று ஹைதராபாத் அணியின் பவுலிங்கை தனி ஆளாக விட்டு விளாசியிருக்கிறார் சஞ்சு சாம்சன்.

Story first published: Monday, September 27, 2021, 21:19 [IST]
Other articles published on Sep 27, 2021
English summary
Rajasthan set 165 target to srh sanju samson - சஞ்சு சாம்சன்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+